என்னை ஆச்சரியப்படுத்திவிட்டார்.! நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிப்பார்.! கங்குலி நெகிழ்ச்சி

dada

நேற்று ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் இங்கிலாந்து பந்து வீச்சினை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான தொடக்கத்தை அளித்தனர். மேலும் நடுவரிசை வீரர்களான கோலி மற்றும் ரஹானே அஆகியோரும் சிறப்பாக விளையாடினர். இருவருக்கும் சதமடிக்கும் வாய்ப்பு பறிபோனது.

pant six

நேற்றைய போட்டியில் அறிமுக வீரராக 6வது இடத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட் தான் சந்தித்த இரண்டாவது பந்தினை சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கினை துவங்கிய முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தினார். இதனை பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி புகழ்ந்து பேசினார்.

பண்ட் குறித்து அவர் பேசியதாவது: “பண்ட் என்னை ஆச்சரியப்பட வைத்துவிட்டார். கண்டிப்பாக இவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் மேலும், அவருக்கு இன்னும் காலமும் திறமையும் இருக்கின்றன வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்தார். தற்போது கங்குலி லண்டனில் MCC கிரிக்கெட் குழும சந்திப்பில் பங்கேற்று வருவதால் அவர் டிவிட்டர் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

20வயதே ஆனா பண்ட் இது போன்று சிறப்பாக ஆடினால் இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஒரு வீரராக வளம் வருவார். கார்த்திக், சகா போன்றவீர்களுக்கு வயது அதிகரித்து விட்டதால் இனிமேல் அவர்கள் வாய்ப்பு என்பனது சற்று கடினம் தான்.