இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த சொத்து இவர். ஆனால் அவரை இந்திய அணி வீணடிக்கிறது – கம்பீர் கோபம்

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக கே எல் ராகுல் இறங்கி ஐந்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அசத்தி இந்த தொடர் முழுவதும் 224 ரன்களை சேர்த்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Rahul-5

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஆரம்பித்திருக்கும் ஒருநாள் தொடரில் அவரை 5 ஆவது வீரராக இந்திய அணி களமிறக்கி உள்ளது. மேலும் டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரிலும் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இந்நிலையில் இந்த மாற்றம் குறித்து பேட்டி அளித்துள்ள இந்தியனின் முன்னாள் வீரர் கம்பீர் கூறுகையில் : தவான் இல்லாததால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ராகுல் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார்.

அதே போன்று தற்போது ரோஹித் அணியில் இருந்து விலக நேரிட்டதால் ஒருநாள் தொடரிலும் ராகுலை துவக்க வீரராக களமிறக்க வைத்திருக்க வேண்டும். மிடில் ஆர்டரில் அவரை இறக்கக்கூடாது என்று கம்பீர் கூறி உள்ளார். மேலும் தொடக்க வீரர் வரிசையில் இருந்து ராகுலை கீழே இறக்குவது என்பது சரியான முடிவாக இருக்காது. அகர்வாலுடன் ராகுல் விளையாடுவதே அணிக்கு சிறந்ததாக இருக்கும்.

rahul 4

ராகுல் மற்றும் அகர்வால் காம்பினேஷன் ஓப்பனிங் செய்தால் விக்கெட் கீப்பிங்கில் பண்டிற்கு வாய்ப்பு கிடைக்கும். ராகுல் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து அவரை டி20 போட்டியில் கூட விக்கெட் கீப்பராக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் 50 ஓவர் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்ய வைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் மீது அழுத்தம் அதிகரிக்கும் என்றும் அதிக சுமை உண்டாகும் என்றும் கம்பீர் காட்டமாக கூறியுள்ளார்.

Advertisement