- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எனக்கு இருக்கும் அதே உரிமை விராட் கோலிக்கும் உண்டு.. அதுல தப்பே இல்ல.. விராட் கோலி குறித்து கம்பீர் பேட்டி

கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் மற்றும் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். பொதுவாகவே களத்தில் ஆக்ரோஷமான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் குணமடைய இவர்கள் இருவரும் மைதானத்தில் நேரடியாக வார்த்தைப்போரில் ஈடுபட்டது பெரிய அளவில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அதுமட்டும் இன்றி அந்த போட்டி முடிந்து இருவருக்குமே ஐபிஎல் நிர்வாகம் தண்டனையும் வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கௌதம் கம்பீரை ஆர்சிபி மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு விராட் கோலி கட்டியணைத்து பேசிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

இப்படி கடந்த வருடம் காரசாரமாக வார்த்தை முதலில் ஈடுபட்ட இருவரும் இந்த ஆண்டு சமரசமாக பேசிக் கொண்டது அனைவரது மத்தியிலும் மீண்டும் பேசுபவர்களாக மாறியது. இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்தும் விராட் கோலிவுடனான உறவு குறித்தும் தற்போது கம்பீர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி உடனான எனது உறவை இந்த நாடு அறிய தேவையில்லை. ஆனால் உங்களின் கணிப்புகள் எல்லாம் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளன. ஏனெனில் விராட் கோலிக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது.

- Advertisement -

அணியின் வெற்றிக்கு உதவுவதற்காக உணர்ச்சிகளை வெளிப்படுத்த எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதேபோன்ற உரிமை அவருக்கும் உண்டு எங்களின் உறவு மக்களுக்கு மசாலா கொடுக்கும் உறவாக இருக்காது என்று கம்பீர் தெரிவித்தார். அதேபோன்று கம்பீர் குறித்து பேசிய விராட் கோலி ஏற்கனவே சில கருத்துக்களை அளித்திருந்தார்.

இதையும் படிங்க : 257 ரன்ஸ்.. 5 ஃபோர்ஸ் 7 சிக்ஸ்.. போராடிய ஆஸ்திரேலியாவை 300 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்த பூரான்.. வெ.இ மிரட்டல்

நான் கம்பீருடன் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்து விட்டது என்று கிண்டலாக தெரிவித்திருந்தார். இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்கிற பேச்சு இருந்து வரும் வேளையில் விராட் கோலி மற்றும் கம்பீர் எவ்வாறு ஒன்றாக பயணிக்க போகிறார்கள் என்பதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -