இவரையா ஐ.பி.எல் ஏலத்தில் எடுக்காம விட்டீங்க. என்ன மாதிரி விளையாடுறாரு – கம்பீர் காட்டம்

Gambhir
- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. பிளே ஆப் சுற்று வரை வந்து எலிமினேட்டர் போட்டியிலும் வெற்றி பெற்று டெல்லி அணியிடம் இறுதியாக தோல்வியடைந்து இந்த வருட ஐபிஎல் தொடரின் முடித்துக் கொண்டது. இந்த சீசன் துவக்கத்தில் அந்த அணிக்கு பெரிய பிரச்சினை இருந்து கொண்டே இருந்தது.

- Advertisement -

காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் மார்ஷ் ஆல்ரவுண்டர் வெளியேற அவருக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் களமிறக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான இவர் வந்தவுடன் சன்ரைசர்ஸ் அணி உச்சத்திற்கு சென்றது. தொடர்ந்து பல போட்டிகளில் அந்த அணிக்கு வெற்றி பெற்று கொடுத்தார். ஐந்து போட்டிகளில் மட்டுமே ஆடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் ரன்களை அடித்து அணியை தூக்கி நிறுத்தி விட்டார் ஜேசன் ஹோல்டர் இப்படிப்பட்ட ஒரு வீரரை ஐபிஎல் அணிகள் எப்படி ஏலத்தில் தவற விட்டு விட்டது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர். அவர் கூறுகையில் …

Holder

ஜேசன் ஹோல்டர் ஏன் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படவில்லை ? ஜேம்ஸ் நீசம், கிரிஸ் மோரிஸ் போன்றவர்களெல்லாம் ஏலத்தில் எடுக்கப்படும்போது ஜேசன் ஹோல்டர் ஏன் எடுக்கப்படவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடி வெற்றி பெற்று கொடுத்தவர். அதனால் நெருக்கடி இல்லாமல் எப்படி ஆட வேண்டும் என்று அவருக்கு தெளிவாக தெரிந்திருக்கும்.

holder

ஒருவேளை நெருக்கடி வந்தாலும் கூட ஹோல்டர் பதட்டமில்லாமல் ஆடி பந்து வீசி அணியை வெற்றிபெற வைத்திருக்கிறார். அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கேப்டனாக இருந்தவர் இதை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருபவர் மிகச்சிறப்பாக பவர்பிளே ஓவர்களில் பந்து வீசுகிறார். மேலும் இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடுகிறார். ஒரு ஆல்ரவுண்டர் வேறு என்ன செய்ய வேண்டும். அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க வேண்டும் இவரை ஏன் ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் கவுதம் காம்பீர்.

Advertisement