- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உ.கோ தொடரில் இந்திய அணிக்கு இவர்களே கடுமையான சவால் அளிப்பார்கள் – கம்பீர் ஓபன்டாக்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்து விட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியும் இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களில் விவரத்தை வெளியிட்டது. இந்நிலையில் இந்த தொடர் குறித்த கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு பெரும் சவால் அளிக்கக்கூடிய அணி குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பாகிஸ்தான் அணியை மற்ற அணிகளை விட சாதாரணமாக எடை போடக்கூடாது ஏனெனில் யூகிக்க முடியாத ஒரு அணியாக அவர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான், ஹபீஸ் என சிறப்பான பேட்ஸ்மேன்களும், ஷாஹின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் போன்ற அதிவேகமான பந்து வீச்சாளர்களும் இருக்கின்றனர். மேலும் பாகிஸ்தானில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் ஒருவருக்கொருவர் சம பலத்துடன் இருப்பதால் நிச்சயம் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இதற்கு முந்தைய ரெக்கார்டுகளை எடுத்து பார்த்தால் கூட பெரிய பெரிய அணிகளை கூட பாகிஸ்தான் அணி எதிர்த்து வெற்றி பெற்று இருக்கிறது இதன் காரணமாக அவர்களை லேசாக எடை போடக்கூடாது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி அக்டோபர் 24ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி தொடர்களில் இதுவரை பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோற்றதில்லை என்பதனால் நிச்சயம் இந்த தொடரிலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி நடைபோடும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by