அவர் நல்லா விளையாடுறாருனு சொல்லாதீங்க. அதுவே அவருக்கு பிரஷர் ஆயிடும் – இளம்வீரரை ஆதரித்த கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதிலும் குறிப்பாக கடைசியாக நடைபெற்ற பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை அங்கு வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்திருந்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் இளம் வீரர்கள் பார்க்கப்படுகின்றனர்.

gill 2

- Advertisement -

குறிப்பாக முகமத் சிராஜ், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, நடராஜன், ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் இவர்கள் அனைவரது அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றது. அதேபோன்று இந்த தொடரில் அறிமுகமாகி அசத்தலாக பேட்டிங் செய்து வரும் கில் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.

மொத்தம் மூன்று போட்டிகளில் 6 இன்னிங்ஸில் விளையாடிய அவர் இரண்டு அரை சதத்துடன் 259 ரன்கள் குவித்து அசத்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகமாகி இப்படி ஒரு அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வரும் நிலையில் தற்போது அவரது பேட்டிங் குறித்தும் அவர் மீதான எதிர்பார்ப்பு குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

gill

இதுகுறித்து அவர் கூறுகையில் : கில்லிடம் திறமை இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆனாலும் அவரது பேட்டிங்கை மேம்படுத்த சிறிது காலம் அவருக்கு வழங்க வேண்டும். இளம் வயதிலேயே அதிகமான எதிர்பார்ப்பை அவர் மீது ஏற்படுத்தினால் அதுவே அவருக்கு நெருக்கடியாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.

Gill-1

இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தற்போது சென்னையில் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement