டீம்ல இவரு வந்துட்டாரு இல்ல. இனிமே இந்திய அணி வரலாறு படைக்கும் – கவுதம் கம்பீர் அதிரடி

Gambhir
- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து அந்த தொடரோடு பயிற்சியாளர் பதவியிலிருந்தும் ரவிசாஸ்திரி விலகினார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார்.

dravid

- Advertisement -

ராகுல் டிராவிட் அவர்களது பயிற்சியின் கீழ் தற்போது இந்திய அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த முதலாவது டி20 போட்டிக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இந்திய அணி இனி வருங்காலத்தில் நிச்சயம் உயரிய இடத்திற்கு செல்லும் என்று கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில் : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அணிக்குள் வந்துள்ளதால் வீரர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை பிறக்கும்.

Dravid

மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக டிராவிட் மாறுவார். ஏற்கனவே இந்திய அணியின் வீரராகவும், ஒரு கேப்டனாகவும் வெற்றிகரமாக செயல்பட்டவர் டிராவிட். அதனை தொடர்ந்து தற்போது பயிற்சியாளராகவும் தனது திறமையை அவர் நிரூபிப்பார் என்று நம்புகிறேன். ஒரு பயிற்சியாளராக அவர் இந்திய அணியை அடுத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் நபராக திகழ்வார்.

- Advertisement -

இதையும் படிங்க : சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோரது பெயரையே தன் பெயராக வைத்துள்ள நியூசி வீரர் – யார் இந்த பிளேயர்?

அவர் கேப்டனாகவும், ஒரு வீரராகவும் விளையாடிய காலங்களில் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார். நிச்சயம் அவர் தற்போது இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது வீரர்களுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுக்கும். அதுமட்டுமின்றி அவர் விரைவில் இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார் என கௌதம் கம்பீர் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement