மழையால் ரத்தான பயிற்சி. லக்னோ அணி வீரர்களை ஒன்றினைத்து கிளாஸ் எடுத்த கம்பீர் – கூறியது என்ன?

Gambhir
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. கொல்கத்தா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி அடுத்து எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோத தயாராக இருக்கிறது.

Quinton De Kock KL Rahul 2

- Advertisement -

இந்நிலையில் புள்ளி பட்டியலில் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்த லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் இன்று எலிமினேட்டர் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ராஜஸ்தான் அணியுடன் மோதும். அதேவேளையில் இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறும்.

அப்படி முக்கியமான இந்த எலிமினேட்டர் போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற இருந்த வேளையில் இன்று காலை முதல் கொல்கத்தாவில் பலத்த மழை பெய்து வந்ததால் பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. எனவே தற்போது இவ்விரு அணிகளும் டாஸ் தாமதமாக போடப்பட்டு நேரடியாக போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.

KL Rahul LSG Quinton De Kock vs KKR

இந்நிலையில் இன்றைய பயிற்சியில் லக்னோ அணி ஈடுபடாத வேளையில் அந்த அணி வீரர்களை ஒன்றிணைத்து அணியின் பயிற்சியாளரான கம்பீர் ஒரு ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துள்ளார். அதன்படி போட்டிக்கு முன்பாக ஓய்வறையில் மீட்டிங்கை ஏற்பாடு செய்த அவர் அணி வீரர்களிடம் கூறியதாவது : நமது அணி திறமைசாலிகள் கொண்ட அணி கிடையாது. அதே போன்று பெரிய பலம் வாய்ந்த அணியும் கிடையாது.

- Advertisement -

ஆனால் நமது அணியால் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு அழுத்தமான நிலையிலும் எதிரணியை சமாளிக்க முடியும் அதுவே நமது பலம். அந்தவகையில் நாம் தற்போது வரை பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் இந்த போட்டியின் வெற்றி நமக்கு மிகவும் முக்கியம். எதிரணியை வீழ்த்துவதற்கு ஒரே ஆயுதம் என்னவெனில் நாம் அனைவரும் ஒரே பாதையில் சிந்திக்க வேண்டும்.

இதையும் படிங்க : தோனி 500 போட்டிகளில் கேப்டன்சி பண்ணியிருக்காரு. அவரோடு இவரை ஒப்பிடாதீங்க ப்ளீஸ் – கங்குலி கருத்து

அதாவது இந்த போட்டியில் விளையாட இருக்கும் 11 வீரர்களும் ஒரே மாதிரி சிந்தனையுடன் ஆர்சிபி அணியை எதிர்த்து விளையாடினால் நிச்சயம் அவர்களை தோற்கடிக்க முடியும் என்று விளக்கம் கொடுத்துள்ளார். அதே வேளையில் தற்போது பெங்களூரு அணியும் பலம் வாய்ந்த அணியாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் நிச்சயம் இந்த போட்டி இரு அணிகளுக்கும் இடையே மிகவும் கடுமையாக செல்லும் என்பது உறுதி.

Advertisement