தோனிக்கு கங்குலி செய்ததை, கோலிக்கு தோனி செய்யவில்லை. அதுவே தோல்விக்கு காரணம் – கம்பீர் தாக்கு

- Advertisement -

தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கௌதம் கம்பீர் எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனியை பற்றி ஏதாவது ஒரு குறை கூறி விடுவார். மற்ற வீரர்கள் அனைவரும் தோனியை வாழ்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரைப் பற்றிச் சாடிக் கொண்டிருப்பார் கம்பீர்.

Gambhir

- Advertisement -

தற்போது அப்படிப்பட்ட ஒரு சாடலை மீண்டும் கொண்டு வந்துள்ளார் கவுதம் கம்பீர். சௌரவ் கங்குலி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரை பற்றி ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் கூறுகையில்..
.
2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு தோனி மட்டும் காரணமல்ல. அந்த அணி மிகச் சிறப்பாக இருந்தது. அதனை பயன்படுத்திதான் வென்றார். அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், விரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் என பல வீரர்கள் இருந்தனர்.

இவர்களெல்லாம் சவுரவ் கங்குலி உருவாகிவிட்ட வீரர்கள். அவர் உருவாக்கிய வீரர்களை வைத்து தான் இவரால் ஜெயிக்க முடிந்தது. அதே நேரத்தில் கங்குலி வீரர்களை உருவாக்கி கொடுத்தது போல் தோனியால் விராட் கோலிக்கு அப்படி வீரர்களை உருவாக்கி கொடுக்க முடியவில்லை என்று சாடியுள்ளார் கவுதம் கம்பீர்.

ZaheerKhan

ஆனால் கௌதம் கம்பீர் சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மகேந்திர சிங் தோனியின் தலைமையில் தான் ரவிந்திர ஜடேஜா, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா வாஷிங்டன் சுந்தர், ஷிகர் தவான், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி புவனேஸ்வர் குமார் என பல வீரர்கள் உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement