இந்த டீம்லாம் பிளேஆப் சுற்றுக்கு வர தகுதியே கிடையாது. இந்த அணி வேஸ்ட் – கடுமையாக சாடிய கம்பீர்

Gambhir

எப்போதும் போல் கைப்பையை நிச்சயம் கைப்பற்றும் என்று கூறி இந்த தொடரை துவங்கிய பெங்களூர் அணி இந்த முறையும் பிளே ஆப் சுற்றில் வெளியேறி விட்டது. இந்த முறையாவது கோப்பையை வெல்லலாம் என்று காத்திருந்த அணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிட்டத்தட்ட இந்த வருட ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

kxipvsrcb

பிளே ஆப் சுற்றுக்கு மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் முன்னேறின. இதில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய எண்கள் கனகச்சிதமாக புள்ளிகள் பெற்று முன்னேறி விட்டது. பெங்களூரு மற்றும் ஹைதரபாத் அணிகள் மற்ற அணிகளின் ரன் ரேட் விகிதம் குறைவாக இருந்ததன் காரணமாக முன்னேறியது.

குறிப்பாக பெங்களூர் அணி 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்ற விட்டு கடைசி நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்தும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அப்படி முன்னேறியும் சன் ரைசர்ஸ் அணிக்கெதிராக போட்டியில் தோற்று இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

rcb 2

இது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் கூறியதாவது.. பெங்களூரு அணி சுற்றுக்கு முன்னேறி விட்டதால் அந்த சுற்றுக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்று அவர்களே கூறிக் கொள்ளலாம். ஆனால் அந்த அணி சற்றும் அதற்கு தகுதியற்ற அணி.

- Advertisement -

rcb

லீக் போட்டியின் கடைசி நான்கு போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்து விட்டு எப்படி ஒரு அணி முன்னேறும் அதிலும் அதற்கு முன்னதாக நடைபெற்ற மும்பை போட்டியில் அதிர்ஷ்டவசமாக பெங்களூரு அணி வெற்றி பெற்று இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் இந்த வருடமும் பிளே ஆப் சுற்றை எண்ணிப் பார்த்திருக்க முடியாது. பெங்களூரு அணிக்கு இந்த வருடமும் மோசமான சீசன் ஆகத்தான் அமைந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் கௌதம் கம்பீர்.