விராட் கோலியின் தேர்வு முற்றிலும் தவறானது. அவரை ஏன் செலக்ட் பண்ணல – கோலியை விளாசிய கம்பீர்

Gambhir
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது 5 போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சில இளம் வீரர்கள் இடம் பிடித்திருக்கின்றனர். அதில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியின்போது வாய்ப்பை பெற்றனர். அதில் இஷான் கிஷன் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து தனது தேர்வை நியாயப்படுத்தி மூன்றாவது போட்டியிலும் இடம் பிடித்தார். ஆனால் அவருடன் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் அந்த அறிமுக போட்டியில் பேட்டிங் செய்யாமலேயே மூன்றாவது போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

ரோஹித்தின் வருகையால் சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார் என்று கோலி எடுத்த இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஏனெனில் பேட்டிங் செய்யாமலேயே அவர் வெளியேற்றப்பட்டுள்ளது அனைவரின் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே வகையில் துவக்க வீரராக ராகுல் தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரை வெளியேற்றாமல் சூரியகுமாரை அணியில் இருந்து நீக்கியது தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சூர்யகுமார் யாதவ் குறித்து கோலி எடுத்த முடிவு முற்றிலும் தவறானது என நேரடியாக தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவ்க்கு இன்னும் மூன்று முதல் நான்கு போட்டிகள் கொடுத்த பின்னர் இந்த முடிவை எடுத்திருந்தால் அது சரியானதாக அமைந்திருக்கும்.

sky

ஆனால் கோலி ஏன் இவ்வாறு செய்கிறார் என்பதை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில் அவரை விளையாட வைத்து பரிசோதித்தால் இந்த தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடுவார். அடுத்ததாக உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் அவர் சிறந்த வீரராக மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாக அவரை அணியில் சேர்த்திருக்க வேண்டும்.

ஆனால் கோலி அதனை செய்ய தவறிவிட்டார். மேலும் உலக கோப்பை தொடரின் போது நம்பர் 4,5 ஆகிய இடங்களில் விளையாடும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் யார் இறங்குவார்கள் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் : நம்பர் 4 5 ஆகிய இடங்களில் சரியான பேக்அப் வீரர்களே இல்லை என்றும் அந்த இடத்தில் பேக்கப் வீரராக சூர்யகுமார் யாதவை அணியில் வைத்திருக்க வேண்டும் என்றும் கம்பீர் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement