கோவிட் காரணமாக தனிமைப்படுத்தி கொண்ட இந்திய கிரிக்கெட் பிரபலம் – விவரம் இதோ

Corona-1

தற்போது கொரோனவைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. உண்மையைச் சொல்லப் போனால் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை வரும் என்று உலகமே அதிர்ச்சியில் தங்களை காத்துக் கொள்ள தயாராகி வருகிறது. எந்த வித்தியாசமும் பாராமல் பாதுகாப்பு உபகரணங்கள் என்று முக கவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் சுற்றும் நபர் அனைவரையும் இந்த வைரஸ் பாதித்துக் கொண்டிருக்கிறது.

corona 1

இந்தியாவில் அனைத்து தளர்வு களும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மிக வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. மேலும் இந்திய மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை வாழ துவங்கிவிட்டனர். எப்படிப் பார்த்தாலும் இந்த வைரஸ் அதிகமாகிறது என்பது தான் உண்மை தற்போது வரை பல பிரபலங்களை இந்த வைரஸ் தாக்கிவிட்டது.

மிழகத்தில் பல்வேறு ஆளுமைகளை இந்த வைரசுக்கு நாம் பறிகொடுத்துள்ளோம். சென்ற மாதம் கூட கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்கள் பாடிய ஜாம்பவான் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு மீண்டாலும் உடல்நலமின்றி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

corona

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தனது வீட்டில் வைரஸ் புகுந்து விட்டதாகவும், தனது வீட்டில் ஒரு கரோனா வைரஸ் கேஸ் இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார். மேலும் தனது வைரஸ் முடிவிற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதனைத் தாண்டிய அனைவரும் பாதுகாப்புடனும் விதிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் .

- Advertisement -

இந்திய அணிக்காக கௌதம் கம்பீர் பத்து வருடங்கள் டெஸ்ட் போட்டியிலும், எட்டு வருடங்கள் ஒருநாள் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். 58 டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 5000 ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 6000 ரன்களும் அடித்திருக்கிறார். கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கௌதம் கம்பீர் இரண்டு முறை அந்த அணிக்காக கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.