இவரது பேட்டிங்கை பார்த்து இந்திய வீரர்கள் இன்னும் நிறைய கத்துக்கனும் – அட்வைஸ் செய்த கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை எதிர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

root 2

- Advertisement -

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி இன்று மேலும் 23 ரன்கள் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக ஜோ ரூட் 218 ரன்களையும், சிப்லி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் முறையே 87 மற்றும் 82 ரன்கள் அடித்தனர். இந்திய அணி சார்பாக பவுலிங்கில் அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் மற்றும் நதீம் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்நிலையில் தற்போது இந்திய இளம் வீரர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் சென்னை மைதானத்தில் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கடந்த மூன்று போட்டிகளிலுமே சதம் அடித்து அசத்தியுள்ளார். இலங்கை மைதானத்தில் பேட்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஏனெனில் அங்கு பந்துவீச்சு பவுலர்களுக்கு கைகொடுக்கும்.

Sibley 1

ஆனால் அது போன்ற மைதானத்திலேயே சிறப்பாக செயல்பட்டு சதமடித்தார். அதே போன்று இந்தியாவிலும் சுழற்பந்து வீச்சுக்கு நல்ல ஒத்துழைப்பு இருக்கும். இருப்பினும் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். வெயிலின் கொடூரம் அதிகமாக இருந்தும் தனது திறமையை நிதானமாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவரை பார்த்து இந்திய அணியின் இளம் வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என கௌதம் கம்பீர் அட்வைஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

root 1

மேலும் சமீபகாலமாகவே 50 ரன்களை கடந்து சதத்தை தவற விட்டு வந்த ஜோ ரூட் சற்று விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் கடந்த நான்கு போட்டிகளில் அவர் விளையாடிய விதம் அவர்கள் கூறிய கருத்தை தவறு என்று கூறுமளவிற்கு தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணி தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement