இனிமே உங்களுக்கு ஏ.பி.டி வேணாம். இவங்க 3 பேரை மட்டும் தக்கவைங்க – கம்பீர் ஆலோசனை

Gambhir
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மிக பலம் வாய்ந்த அணியாக ஆண்டுதோறும் பார்க்கப்பட்டு வரும் அணிகளில் ஒன்றாக பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற 13 ஐபிஎல் தொடர்களில் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றாத பெங்களூர் அணி இம்முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூர் அணியானது எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணியுடன் நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பையும் அவர்கள் தவற விட்டுள்ளனர்.

Morgan

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக அடுத்த ஆண்டு புதிய கேப்டன் நியமிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் இணைய உள்ளதால் அணி வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட சில வீரர்களையே அதாவது மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைக்க வாய்ப்புள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்கள் குறித்து யோசனை செய்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரு அணி தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் தனது ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

maxwell

என்னைப் பொறுத்தவரை இனி வரும் ஐபிஎல் தொடர்களில் ஏ.பி.டிவில்லியர்ஸை தக்கவைப்பது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்பது தெரியாது. ஆனால் விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் இன்னும் சில ஆண்டுகள் ஆர்.சி.பி அணிக்காக விளையாட முடியும். எனவே முதல் இரண்டு வீரர்களாக அவர்களைத் தக்க வைக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : குவாலிபயர் 2 : இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – ஜெயிச்சிடுவாங்க போல

பின்னர் 3-ஆவது வீரராக இளம் சுழற்பந்து வீச்சாளரான சாஹலை தக்க வைக்கலாம். இவர்கள் மூவரும் தான் பெங்களூர் அணியின் முக்கிய வீரராக இனிவரும் சீசன்களில் திகழ்வார்கள். இதன் காரணமாக நிச்சயம் அவர்கள் மூவரை தக்க வைப்பது தான் சரியான முடிவாக இருக்கும் என கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏபி டிவிலியர்ஸ் தற்போது பேட்டிங் செய்ய கஷ்டப்படுகிறார் என்றும் மேக்ஸ்வெல் அணியின் எதிர்காலமாக இருப்பார் எனவும் கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement