இனி இந்திய அணிக்கு இவரைப்போன்ற ஒரு வீரர் கிடைக்கமாட்டார் அப்படி யாரையும் பார்க்கவும் முடியாது – கம்பீர் ஓபன் டாக்

Gambhir

இந்திய அணிக்கு 2001 ஆம் ஆண்டு கங்குலியின் தலைமையில் அறிமுகமானவர் விரேந்தர் சேவாக். கிட்டத்தட்ட 104 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 8,589 ரன்கள் குவித்துள்ளார். இதில் 23 சதங்களும் 32 அரை சதங்களும் அடங்கும். அதேபோல் முதன்முதலில் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் விளாசிய இந்திய வீரர் இவர்தான்.

Sehwag

அதுவும் 2008ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் போட்டியில் ஒருநாள் போட்டி போன்று தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார் .தற்போது இதனை குறிப்பிட்டுள்ளார் அவரது சக துவக்க வீரர் கவுதம் கம்பீர். அவர் கூறுகையில் …

சேவாக்கின் தனிச்சிறப்பு இதுதான் எப்போது அதிரடியாக ஆட வேண்டும் என்று தேவை வந்தால் உடனடியாக பட்டையை கிளப்பி விடுவார். சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பற்றி பேச விரும்புகிறேன். நமக்கு 386 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

அவர்களது பக்கம் கிரேம் ஸ்வான், பனேசர் போன்ற திறமை வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அப்படி இருந்தும் வீரேந்தர் சேவாக் எதைப்பற்றியும் கவலைப்படாமல் 68 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் ஒருநாள் நின்றால் போதும் ரன்கள் எவ்வாறு தானாக வந்து சேரும் என்பதை நாம் பலமுறை கண்டுள்ளோம்.

- Advertisement -

அவரது அந்த சரியான நேரத்தின் அதிரடியால் இந்திய அணி அந்த போட்டியில் வெற்றியும் பெற்றது இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் கூட யோசிக்காமல் அதிரடி ஆடுவதில் சேவாக் கெட்டிக்காரர் . டெஸ்ட் அணியில் சேவாக் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்றும் அவரைப்போன்ற ஒருவீரரை பார்க்க முடியாது என்றும் புகழ்ந்து பேசியுள்ளார் கவுதம் கம்பிர்.