ரசல் லாஸ்ட் 2,3 வருஷமா தான் நல்லா விளையாடுறாரு. ஆனா இவரு 12 வருஷமா நல்லா விளையாடுறாரு – கம்பீர் ஓபன் டாக்

Gambhir
- Advertisement -

ஐபிஎல் தொடர் காலவரையறை இன்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் குறித்த விவாதங்கள் எழுந்துகொண்டே இருக்கிறது. தற்போது வரை 12 ஐபிஎல் தொடர் நடந்து இருக்கிறது. இதனால் இந்த அனைத்து தொடர்களிலும் சேர்த்து யார் மிகச் சிறந்த வீரர்? யார் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்? மிகச்சிறந்த அணி எது? யார் சிறந்த கேப்டன்? என்று பல்வேறு விவாதங்கள் நடத்தி பல்வேறு தரப்பினர் தங்களது தீர்வை கூறி வருகின்றனர்.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன் தான் என பல வீரர்களும் கூறி வருகின்றனர். இவர் 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தனது பயணத்தை துவக்கினார். அப்போதே அந்த அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வந்து சேர்ந்தார். இறுதிப் போட்டியில் அபாரமாக ஆடி சென்னை அணியை கோப்பையில் பெற வைத்தார்.

இதுவரை இரண்டு முறை ஐபிஎல் தொடர்நாயகன் விருதையும் வென்றுள்ளார். இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் இவர் தான்.இவர் தற்போது வரை 134 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 3565 ரன்கள் குவித்துள்ளார். ஒரு ஆல்ரவுண்டர் ஆக இருந்தாலும் சமீப காலமாக அவர் பந்து வீசவில்லை. இவர் குறித்து பேசிய கெவின் பீட்டர்சன் கூறுகையில் :

Watson-1

அவர் பந்து வீச்சை விட்ட பின்னர் அவரது பேட்டிங் மிகவும் அற்புதமாக மாறிவிட்டது. இன்னும் சிறப்பாக ஆடுகிறார். அவர் அவ்வளவு சிறப்பு வாய்ந்த வீரர். நான் அவருடன் இரண்டு வருடம் ஆடிக்கொண்டு இருந்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த வீரர் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

கௌதம் கம்பீர் கூறுகையில் : கடந்த 12 ஆண்டுகளில் என்னை கேட்டால் ஷேன் வாட்சன் தான் மிகச்சிறந்த வீரர். எனில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் அவர் மேஜிக் செய்துள்ளார். எல்லாம் வைத்துப் பார்த்தால் ஒட்டுமொத்தமாக அவர்தான் ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த வீரர் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பீர்.

Watson

அதேநேரம் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளை பார்த்தோமானால் நான் ஆண்ட்ரே ரசலை சிறந்த வீரர் என்று கூறுவேன். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஷேன் வாட்சன் என்றே நான் கூறுவேன்.

Advertisement