அவரை மாதிரி இந்திய அணிக்கு ஒரு ஆல் ரவுண்டர் கிடைப்பார் என நம்புவது முட்டாள்தனம் – கெளதம் கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கர், சச்சின் டென்டுல்கர்,
விராத் கோலி என அன்று முதல் இன்றுவரை பல தரமான பேட்டர்கள் இருந்து கொண்டே இருந்தார்கள். இவர்கள் கடினமான தருணங்களிலும் கூட எதிரணியை பந்தாடி ரன்களை குவித்து இந்தியாவுக்காக பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்கள். ஆனால் இந்திய அணியில் ஒரு தரமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

Kohli-1

- Advertisement -

அதேபோல் ஜவகள் ஸ்ரீநாத், ஜஹீர் கான், ஜஸ்பிரித் பும்ரா என அன்றும் இன்றும் இந்திய ரசிகர்கள் என்றும் பெருமைப்படும் அளவுக்கு பல தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் இந்தியாவின் பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்கள். சுழல் பந்துவீச்சு துறையிலும் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் என பல உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இந்தியாவிற்கு கிடைத்தார்கள்.

கிடைக்காத ஆல் ரவுண்டர் :
ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆல்ரவுண்டர்களுக்கு பஞ்சம் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. கபில்தேவ், யுவராஜ் சிங் என இந்தியா கண்டெடுத்த ஆல்ரவுண்டர்களை எண்ணி பார்த்தால் அதில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மட்டுமே இருந்தார்கள்.

hardik2

அதிலும் குறிப்பாக முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இன்று வரை கிடைக்கவில்லை. இர்பான் பதான் தொடங்கி தற்போது ஹர்டிக் பாண்டியா வரை ஆல்ரவுண்டர்களை உருவாக்க இந்தியா எத்தனையோ முயற்சிகளை எடுத்த போதிலும் அதில் இப்போது வரை முழுமையான வெற்றியை பெறமுடியவில்லை. கடைசியாக நம்பிக்கை கொடுத்த ஹர்திக் பாண்டியாவும் காயமடைந்ததன் காரணமாக பந்து வீச முடியாமல் இந்திய அணியிலிருந்து வெகுதூரம் சென்று விட்டார்.

- Advertisement -

நம்புவது முட்டாள்தனம்:
இந்நிலையில் கபில்தேவ் போல ஒரு ஆல்ரவுண்டர் மீண்டும் இந்தியாவுக்கு கிடைப்பார் என்று நம்புவது முட்டாள்தனம் என இந்தியாவின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு.

Kapil

“உங்களிடம் ஒன்று இல்லை என்றால் அதை தேடிப் போகக்கூடாது. அது இல்லை என ஒப்புக்கொண்டு அதிலிருந்து நகர முயற்சிக்க வேண்டும். உங்களால் உருவாக்க முடியாததை உருவாக்கலாம் என முயற்சிக்க கூடாது. அதில் தான் பிரச்சனை உள்ளது. சர்வதேச கிரிக்கெட் என்பது செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கான ஒரு இடமே தவிர ஒருவரை வளர்ப்பதற்கான இடமில்லை. உள்ளூர் மற்றும் லிஸ்ட் ஏ கிரிகெட் தான் ஒருவரை வளர்ப்பதற்கு சரியான இடமாகும். உங்களுக்கு உங்களின் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நேரடியாக அங்கு சென்று நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரையும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்காக வலுக்கட்டாயமாக வளர்க்க முடியாது. ஏனெனில் அது எப்போதும் நடக்காத காரியம் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆல்ரவுண்டர் போன்ற ஒரு இடத்தில் ஒருவர் விளையாட வேண்டுமானால் அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இயற்கையாகவே அந்த திறமையை கொண்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒருவரை வளர்ப்பது என்பது அசாத்தியமென கூறியுள்ளார்.

kapildev

கிடைக்க போவதில்லை :
“உண்மையை சொல்ல வேண்டுமானால் கபில் தேவுக்கு பின் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் கிடைக்கவில்லை என நாம் பேசி வருகிறோம். எனவே அதிலிருந்து நகர்ந்து ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் திறமையானவரை கண்டறிந்து அவர்கள் முழுமையடைந்த பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களை ஒரு சில போட்டிகளில் உடனடியாக மாற்ற கூடாது. விஜய் சங்கர், சிவம் துபே, வெங்கடேஷ் ஐயர் போன்றவர்களை சமீப காலங்களாக பார்த்து வருகிறோம். அவர்களிடமிருந்து நாம் நகர்ந்து செல்ல வேண்டும்”

- Advertisement -

என இது பற்றி மேலும் தெரிவித்துள்ள கௌதம் கம்பீர் ஒரு தரமான ஆல்ரவுண்டரை ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் கண்டறிந்து இந்தியாவுக்காக விளையாட வைக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். மேலும் சமீபத்தில் வாய்ப்பளிக்கப்பட்ட விஜய் சங்கர், வெங்கடேஷ் ஐயர் போன்றவர்களை போல் அல்லாமல் ஆல்ரவுண்டர் இடத்தில் விளையாட வைக்க நினைக்கும் வீரர்களை வெறும் ஒரு சில போட்டிகளில் கழட்டி விடாமல் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கேப்டனாக விலகினாலும் தோனி வழியில் இந்த ஒரு விடயத்தை கடைபிடிப்பேன் – விராட் கோலி சபதம்

அவர் கூறுவது போல கபில் தேவுக்கு பின் அவரின் இடத்தில் கடந்த 25 ஆண்டுகளில் பல இளம் வீரர்களை இந்தியா சோதித்து பார்த்து விட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த முயற்சிக்கான முழு வெற்றி கிடைக்கவில்லை. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5000+ ரன்களையும் 400+ விக்கெட்டுகள் எடுத்த ஒரு மகத்தான ஆல்ரவுண்டர் கபில்தேவ் ஆவார். எனவே அவரை போன்ற ஒருவர் இயற்கையாகவே கிடைக்கும் வரை காத்திருப்பதை தவிர இந்தியாவுக்கு வேறுவழி இல்லை என்பது நிதர்சனமாகும்.

Advertisement