ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் கோலி இருவரில் யார் சிறந்தவர். சரியான விளக்கத்தை தெளிவாக அளித்த கம்பீர் – விவரம் இதோ

- Advertisement -

கொரோனோ வைரஸ் காரணமாக தற்போது உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதன் காரணமாக கிடைத்த ஓய்வு நேரத்தை தற்போது சமூக வலைத்தளம் வழியாக பகிர்ந்து வரும் அவர்கள் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தும், தங்களது அனுபவத்தை சக வீரர்களுடன் நேரலையில் பகிர்ந்து கொண்டும் வருகின்றனர்.

Gambhir

- Advertisement -

அதன்படி பல்வேறு கருத்துக்களை நாம் செய்திகளாக தினந்தோறும் படித்து வருகிறோம். இந்நிலையில் தற்போது ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் கனெக்ட் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கௌதம் கம்பீரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதில் ஒருநாள் அணியில் சச்சினை சேர்ப்பீர்களா ? அல்லது கோலியை சேர்ப்பீர்களா ? எனக் கேள்வி கேட்கப்பட்டது. இந்த விமரிசையான கேள்விக்கு தனது சுவாரசியமான விளக்கத்துடன் கௌதம் கம்பீர் பதில் அளித்துள்ளார். இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாகவே சச்சின் மற்றும் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Sachin

அதற்கு பல்வேறு விமர்சகர்களும் தங்களது பதிலை அளித்து வர தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த கம்பீர் ஒருநாள் போட்டியை பொறுத்தவரை எப்போதும் நான் சச்சின் டெண்டுல்கரைத்தான் தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் அப்போது இருந்த ஒருநாள் போட்டிகளுக்கான பீல்டிங் விதிமுறைகள் இப்போது இருப்பதைவிட கடுமையானது. இப்பொழுது இருப்பது போன்ற எளிமையான கட்டுப்பாடுகள் அப்போது இருக்கவில்லை.

- Advertisement -

எனவே சச்சின் தான் என்னுடைய விருப்பம். இது எனக்கு கடினமான முடிவு தான் ஏனென்றால் விராத் கோலியும் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் இப்போதுள்ள விதிமுறைகள் முற்றிலும் மாறிவிட்டன. இப்போது உள்ள விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கின்றன. மேலும் அது ரன் குவிப்பை எளிமையாகவும் மாற்றியுள்ளன. மேலும் தொடர்ந்து கம்பீர் பேசுகையில் ; இன்றைய தலைமுறைக்கான போட்டியில் இரண்டு புதிய பந்து 50 ஓவர்களுக்கும் வட்டத்தின் உள்ளே ஐந்து பீல்டர்கள் தான்.

sachin ganguly 2

இதனால் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால் சற்று பின்னோக்கி சச்சின் விளையாடும் காலத்தை பார்த்தால் அவர்களது வெற்றி இலக்கே 230, 240 தான் இருந்திருக்கிறது ஆனால் அந்த ரன்களிலேயே சச்சின் பெருமளவு பங்கு வகித்து இவ்வளவு ரன்களை குவித்துள்ளார் என்ற காரணத்தினாலே நான் சிறந்த வீரராக சச்சினை தேர்வு செய்கிறேன் என்று தனது விளக்கத்தையும் கம்பீர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

Advertisement