இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துவக்க வீரரான ரோகித் சர்மா நேற்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய அணி வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது ரோஹித் சர்மா வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். இருப்பினும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரோஹித் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணிக்காக இதுவரை 32 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 224 ஒருநாள் போட்டிகள் மற்றும் 108 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதம் அடித்த வீரர் என்ற அசைக்க முடியாத சாதனையும் தன்வசம் வைத்துள்ளார்.
இப்படி அதிரடியில் அசத்திவரும் ரோஹித் கிரிக்கெட் ரசிகர்களால் அதிரடி மன்னனாகவும், ஹிட்மேன் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் 29 சதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 சதம் மற்றும் டி20 போட்டிகளில் 4 சதம் என இவரின் சாதனையை அடுக்கிக் கொண்டே போகலாம். ஒருநாள் கிரிக்கெட்டில் யாரும் எட்ட முடியாத சாதனையாக அவரது மூன்று இரட்டை சதங்கள் பார்க்கப்படுகின்றன.
ரோகித் பிறந்தநாளான நேற்று தன்னுடைய வீட்டிலேயே எளிமையாக கொண்டாடிய அவருக்கு சக வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் முக்கியமானதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிஜேபி எம்.பி. ஆன கௌதம் கம்பீர் செய்திருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Happy Birthday to the best white ball cricketer in the world @ImRo45! Have a great year ahead!! pic.twitter.com/PJqDTVcohy
— Gautam Gambhir (@GautamGambhir) April 30, 2020
அவரது ட்விட்டர் பக்கத்தில் கம்பீர் பதிவிட்டதாவது : ஒயிட் பால் (அதாவது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள்) கிரிக்கெட்டில் உலகிலேயே சிறந்த ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தான் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருக்கு அந்த பதிவின் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் இந்த ஆண்டு முழுவதும் அவருக்கு சிறப்பாக அமைய தனது வாழ்த்துக்களை கம்பீர் தெரிவித்துள்ளார்.