அவரோட கேப்டன்சி ஸ்டைலை தான் ரோஹித் சர்மா பாலோ பண்றாரு – கவுதம் கம்பீர் கருத்து

Gambhir
Advertisement

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் தங்களது வாய்ப்பினை பிரகாசப்படுத்தி உள்ளது.

IND vs AUS

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மூன்று நாட்களில் பெற்ற வெற்றியின் காரணமாக ரோகித் சர்மாவின் கேப்டன்சி அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விராட் கோலி உருவாக்கிய டீமை வைத்து தான் அவரது வழியிலேயே வெற்றிகரமாக செயல்படுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை உறுதியாக நம்புகிறேன். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் கேப்டன்சி ஒரே ஸ்டைலில் தான் உள்ளது. இருவருக்குமே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

rohith

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் இப்படி ஒரு வெற்றிகரமான பாதைக்கு வழி அமைத்ததே விராட் கோலி தான். அதனை அப்படியே ரோகித் சர்மா பின்பற்றி வருகிறார். எனவே இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவை விராட் கோலி எவ்வாறு பயன்படுத்தினாரோ அதேபோன்றுதான் ரோகித் சர்மாவும் பயன்படுத்தி வருகிறார். இருப்பினும் விராட் கோலி ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் நடைபெற்ற தொடர்களில் கூட அற்புதமாக கேப்டன்சி செய்திருக்கிறார். இந்த இடத்தில் தான் ரோகித் சர்மாவிற்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

இதையும் படிங்க : IND vs AUS : தோத்தது கூட பிரச்சனை இல்ல. ஆனா இந்த விஷயத்தை நெனச்சா தான் கஷ்டமா இருக்கு – இயான் சேப்பல் கருத்து

ரோகித் சர்மா வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் எவ்வாறு செயல்படப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய அணியில் முகமது ஷமி, சிராஜ், பும்ரா, அஸ்வின், ஜடேஜா, அக்சர் என அனைவரையுமே அற்புதமாக கட்டமைத்து இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை பலமாக்கியவரும் விராட் கோலி தான் என்று கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement