IND vs AUS : தோத்தது கூட பிரச்சனை இல்ல. ஆனா இந்த விஷயத்தை நெனச்சா தான் கஷ்டமா இருக்கு – இயான் சேப்பல் கருத்து

Ian Chappell Rohit Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று டெல்லியில் அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்தோடு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்த ஆஸ்திரேலியா அணி இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்து இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளது.

Nathan Lyon Pujara IND vs AUS

- Advertisement -

உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா அணி இப்படி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ரன்களை சேர்க்க திணறுவதோடு அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்து இருந்தது.

ஆனால் தற்போது இந்திய அணிக்கு எதிராக இப்படி அடுத்தடுத்த தோல்விகளை பெற்றது அவர்களுக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது. குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோறது பந்துவீச்சை எதிர்கொள்ள இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி நட்சத்திர வீரர்களான ஸ்மித் மற்றும் லாபுஷேன் ஆகியோரே திணறுகின்றனர்.

அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தால் அந்த அணி வெகு விரைவாக ஆல் அவுட் ஆகிறது. இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரை நான்குக்கு பூஜ்யம் (4-0) என்ற கணக்கில் கூட கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசியிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயான் சேப்பல் கூறுகையில் : தோல்வி அடைந்தது கூட பரவாயில்லை. ஆனால் இவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்திருக்கக் கூடாது. இரண்டாவது நாள் மாலையில் சிறப்பாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் காலை நடைபெற்ற ஆட்டத்தில் இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அகல பாதாளத்திற்கு சென்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதையும் படிங்க : IND vs AUS :ஆஸி அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார். ஏன் தெரியுமா? – வெளியான அறிவிப்பு

ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் விக்கெட்டுகளை காப்பாற்ற முயற்சிக்காமல் இந்திய அணிக்கு விக்கெட்டுகளை பரிசாக கொடுத்தனர். இதே போன்று விளையாடினால் ஆஸ்திரேலிய அணியின் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக உள்ளது என இயான் சேப்பல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement