- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs SL : விராட் கோலி தனது தொடர்நாயகன் விருதினை அவருடன் பகிர்ந்திருக்க வேண்டும் – கம்பீர் கருத்து

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நேற்று முன்தினம் திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றியை பெற்ற இந்திய அணியானது தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் மூன்றாவதாக நடைபெற்று முடிந்த ஒருநாள் போட்டியையும் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இந்த இமாலய வெற்றியின் மூலம் சரித்திர சாதனையுடன் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த தொடரின் வெற்றிக்கு பின்னர் தொடர் நாயகனாக இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனெனில் இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் முதல் போட்டியிலும், மூன்றாவது போட்டியிலும் சதம் அடித்த அவர் மூன்று வெற்றிகளிலும் பங்காற்றி இருந்ததால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தால் அவருக்கும் தொடர் நாயகன் விருதினை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் அதிக அளவில் எழுந்து இருந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் கூறுகையில் :

என்னை பொறுத்தவரை இந்த தொடரின் தொடர் நாயகன் விருது முகமது சிராஜிக்கு வழங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரும் தொடர் நாயகன் விருதிற்கு முழுமையான தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்த அவர் மூன்றாவது போட்டிகளில் நான்கு விக்கெட் எடுத்து மொத்தம் ஒன்பது விக்கெடுகளை கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

அதோடு பவர்பிளே ஓவர்களிலேயே அவர் அதிக அளவில் விக்கெட்டை கைப்பற்றி இருந்தால் நிச்சயம் அந்த விருந்துக்கு தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் தனது பங்களிப்பை அவர் மிக சரியாக வழங்கியிருந்தார். ஆனால் எப்பொழுதுமே ஒருநாள் தொடர்களில் பேட்ஸ்மேன்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அது ஒன்றும் புதிதான விடயம் கிடையாது.

இதையும் படிங்க : IND vs NZ : முதல் ஒன்டே நடைபெறும் ஹைதராபாத் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளி விவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

ஆனாலும் விராட் கோலி தனது தொடர் நாயகன் விருதினை சிராஜுடன் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும். முகமது சிராஜ் தற்போது தனது பந்துவீச்சில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளார். நிச்சயம் அவர் இந்திய அணியின் எதிர்காலத்தில் முக்கிய வீரராக இருப்பார் என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by