- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கம்பீரின் பேச்சை கேட்காமல் களமிறங்கிய கோலி அண்ட் கோ. இதெல்லாம் தேவைதான் – வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது க்ரிஸ்ட் சர்ச் மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தனது முதல்நாள் ஆட்டத்தை விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து நேற்று பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறுகையில் : பிளாட் பிச்சாக இருந்தாலும் சரி, க்ரீன் பிட்ச்சாக இருந்தாலும் சரி இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும் என்று கோலிக்கு அறிவுரை செய்திருந்தார்.

- Advertisement -

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் ஆடுகளம் எப்படி இருந்தாலும் 5 பந்துவீச்சாளர்கள் இருந்தாலே இந்திய அணிக்கு வெற்றி காண வாய்ப்பு இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்து உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 60 புள்ளிகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

ஆனால் இன்றைய போட்டியிலும் 4 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. கம்பீரின் அறிவுரையை மதிக்காத கோலியின் இந்த முடிவு குறித்து விமர்சனங்கள் இப்போதே எழத்தொடங்கி உள்ளன. மேலும் தற்போது முதல் இன்னிங்சில் இந்திய அணி ஆட்டம் இழக்கும் நிலையில் உள்ளது. தற்போது வரை 220 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தள்ளாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by