டெத் ஓவர்களில் பந்துவீசுவதில் இவர்தான் இந்திய அணியில் பெஸ்ட். அதில் மாற்றமே இல்ல – கம்பீர் அதிரடி

Gambhir

தொடர்ச்சியான காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து சில காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு புவனேஸ்வர் குமார் சில ஆண்டுகளாக எந்தவித போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாட வில்லை. இருந்தபோதிலும் அவர் ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாகவே ஆடி வந்தார். நீண்ட காலம் கழித்து இங்கிலாந்து உடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் புவனேஸ்வர் குமார் பெயர் இடம்பெற்றிருந்தது. ரொம்ப நாள் கழித்து ஆடப் போகிறார் எப்படி ஆடுவார் என்ற கேள்வியை உடைக்கும் வண்ணமாக புவனேஸ்வர் குமார் மிக அற்புதமாக இந்த டி20 தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் புவனேஸ்வர் குமார் பற்றி சில விஷயங்களை செய்தியாளர் இடத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஸ்வர் குமார் மொத்தமாக 2 விக்கெட்டுகளை மட்டுமே ஆனால் மறுபக்கம் அவரது ரன் ரேட் எகானமி 7.14 மட்டுமே. இதுதான் ஒரு பந்துவீச்சாளர்களுக்கு மிக மிக முக்கியமானது , பந்துவீச்சாளர் வீசும் ஒவ்வொரு டாட் பந்துகளும் அணியின் வெற்றியை தீர்மானிக்கும்.

அதை புவனேஷ் குமார் குமார் தனக்கே உரிய பாணியில் சிறப்பாக செய்து வருகிறார். புதிய பந்தில் அவருடைய ஸ்விங் பந்து வீச்சு மிக மிக அபாரமாக இருக்கிறது , அவரது பழைய பார்ம் இன்னும் அவர் இடத்தில் இருக்கிறது என்று கௌதம் கம்பீர் கூறினார்.

Bhuvi

இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் டி20 தொடரில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி இவர்களது கூட்டணி எதிரணியை கலங்கச் செய்யும் அளவிற்கு இருக்கும். பும்ரா மற்றும் சமி ஒரு பக்கம் விக்கட்டுகளை அதிகமாக வீழ்த்தி வந்தாலும் எக்கானமியில் புவனேஷ்வர் குமார் ஓர் எக்ஸ் பேக்டராக இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய வீரராக திகழ்வார்.

- Advertisement -

Bhuvi-1

இவர்களது கூட்டணி பந்துவீச்சை காண மிகவும் ஆவலாக உள்ளேன் என்றும் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். தொடர் காயத்திலிருந்து மீண்டு வந்த புவனேஷ்வர் குமார் தற்போதும் தனது இயல்பான பாணியில் அசத்தலாக பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது.