இந்த ஒரு சாதனை போதும் தோனியின் வரலாறு நிலைத்து இருக்கும் – கவுதம் கம்பீர் புகழாரம்

Gambhir
- Advertisement -

தோனி இந்திய அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து ஆடிவருகிறார். 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து 2017ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்த காலகட்டத்திற்குள் ஆகவே ஒரு கேப்டனாக பல சாதனைகளை படைத்து விட்டார். தோனியின் தலைமையில் தான் இந்திய அணி முதன் முதலாக டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.

Dhoni-1

- Advertisement -

அதனை தாண்டி டெஸ்ட் ஒருநாள் டி20 என மூன்று வகையான போட்டிகளிலும் ஒரே நேரத்தில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. தோனியின் தலைமையில் உலக கேப்டன்கள் சாதிக்காத ஒரு விஷயத்தை செய்துள்ளார். டி20 உலக கோப்பை தொடர், ஒரு நாள் உலக கோப்பை தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என மூன்று கோப்பைகளையும் ஒரு ஆறு வருட காலகட்டத்திற்குள் வென்ற ஒரே ஒரு கேப்டன் தோனி தான்.

இந்த சாதனையை எந்த ஒரு வீரரும் தற்போது வரை முறியடிக்கப்படவில்லை. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் தோனியின் முன்னாள் சக வீரர் கவுதம் காம்பீர். இதுகுறித்து அவர் கூறுகையில்…

Gambhir-1

ஐசிசி தொடருக்கான மூன்று கோப்பைகளையும் உலகிலேயே வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டும் தான். நீங்கள் இந்த சாதனையைப் பற்றி எப்போது வேண்டுமானாலும் பேசலாம் ஏனெனில் இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. அப்படி ஒருவர் இன்னும் வந்து விடவில்லை என்றே நினைக்கிறேன்.

Gambhir

டி20 உலக கோப்பை 2007, ஒரு நாள் உலக கோப்பை 2011, சாம்பியன்ஸ் கோப்பை தொடர் 2013 என அனைத்தையும் என்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. நாம் தற்போது பார்த்து வரும் பல சாதனைகளை முறியடித்து விடலாம். அதிக சதங்கள் சாதனையை முறியடித்து விடலாம். அதிக போட்டிகள் சாதனையை முறியடித்து விடலாம். இப்படி பல சாதனைகள் முறியடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் தோனி படைத்துள்ள இந்த ஒரு சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கூறியுள்ளார் கவுதம் காம்பீர்.

Advertisement