ஆனா ஊனா சண்டை போடாம அவரை பாத்து எப்படி விளையாடுறதுனு கத்துக்கோங்க – கம்பீர் அறிவுரை

gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை ஓன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அடுத்து வரும் 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியின் போது இந்திய வீரர்கள் தென்ஆப்பிரிக்க வீரர்களிடம் தொடர்ந்து சண்டையிடுவதும், வார்த்தை போரில் ஈடுபடுவதும், ஸ்லெட்ஜிங் செய்வது என ஆக்ரோஷமாகவே இருந்தனர். அதுவும் போட்டியின் கடைசி நாளன்று அது மிகவும் அதிகமாக இருந்தது. அதனை நீங்களும் கவனித்திருக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இப்படி இந்திய அணி வீரர்கள் தேவையில்லாமல் சண்டை இட்டது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கூறுகையில் : போட்டியின்போது ஸ்லெட்ஜிங் செய்வது என்பது எளிதான ஒன்று தான். ஆனால் அப்படி செய்வதை விட நாம் நம்முடைய ஆட்டத்தில் திறமையை காண்பிக்க வேண்டும். தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஆட்டத்தின் மீது கவனத்தை செலுத்தியதால் வெற்றி பெற்றார்கள்.

bumrah

ஆனால் இந்திய வீரர்கள் சண்டை போடுவதிலேயே குறியாக இருந்து விட்டனர். என்னை பொருத்தவரை தென்ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் தனது ஆட்டத்தில் தெளிவாக இருந்தார். அவரை பார்த்து இந்திய இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் நிறைய உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நிதானம் என்பது மிகவும் அவசியம்.

- Advertisement -

இதையும் படிங்க : புஜாரா பேட்டிங் பண்ணும்போதெல்லாம் எனக்கு அவர்தான் நியாகபகத்துக்கு வராரு – கவாஸ்கர் புகழாரம்

அந்த வகையில் இந்த போட்டியில் செய்த தவறுகளை எல்லாம் சரி செய்து கொண்டு இந்திய இளம் வீரர்கள் அனைவரும் தங்களது ஆட்டத்தில் கவனத்தை செலுத்த வேண்டுமே தவிர அவர்கள் தனது செய்கைகளால் ஆக்ரோஷத்தை காண்பிக்கக் கூடாது என இந்திய வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement