புஜாரா பேட்டிங் பண்ணும்போதெல்லாம் எனக்கு அவர்தான் நியாகபகத்துக்கு வராரு – கவாஸ்கர் புகழாரம்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அதிக அளவு விமர்சிக்கப்பட்டு வரும் வீரர்களாக இந்திய அணியின் சீனியர் வீரரான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் பார்க்கப்படுகின்றனர். ஏனெனில் கடந்த பல தொடர்களாகவே தடுமாறி வரும் இவர்கள் இருவரும் ஒவ்வொரு போட்டியின் போதும் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் விளையாடி வருகின்றனர்.

rahane

- Advertisement -

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் முதல் போட்டியின்போது இருவரும் சொதப்பினார்கள். ஆனால் அனுபவத்தின் அடிப்படையில் இரண்டாவது போட்டியிலும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி வாய்ப்பினை பெற்ற 2ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் 2-வது இன்னிங்சில் இருவரும் அரைசதம் அடித்தனர். இதன் காரணமாக அடுத்த போட்டியில் அவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ரஹானே 58 ரன்களும், புஜாரா 53 ரன்களும் அடித்ததால் மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புஜாராவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில் : நான் எப்போதெல்லாம் புஜாரா பேட்டிங் செய்யும்போது பார்த்தாலும் எனக்கு தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா தான் ஞாபகத்திற்கு வருகிறார்.

amla1

ஏனெனில் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது கண்ட்ரோலை இழக்காமல் விளையாடும் ஒரு வீரர் ஹசிம் அம்லா. பந்து எப்படி சுழன்றாலும் சரி, எந்தவித மைதானமாக இருந்தாலும் சரி அவருடைய பேட்டிங்கில் முழு கவனம் இருக்கும். கண்ட்ரோல் சிறிதும் குறையாது. அதே போன்று தற்போது புஜாரா விளையாடி வருகிறார். நிச்சயம் இது இந்திய அணிக்கு பலம் தான் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்ட் போட்டியை காயம் காரணமாக தவறவிட இருக்கும் இந்திய அணியின் வீரர் – யார் தெரியுமா?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : புஜாரா போன்ற சிறப்பான ஒரு வீரர் பார்முக்கு வந்து விட்டால் நிச்சயம் அது நல்ல நிலையைத் தரும். அந்த வகையில் தற்போது இரண்டாவது இன்னிங்சின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். நிச்சயம் அவர் இந்த ஆட்டத்தை தொடர்வார் என்று கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement