3 ஆவது டெஸ்ட் போட்டியை காயம் காரணமாக தவறவிட இருக்கும் இந்திய அணியின் வீரர் – யார் தெரியுமா?

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 11-ம் தேதி துவங்க உள்ளது.

INDvsRSA

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டாவது போட்டியின்போது முதுகுவலி காரணமாக விளையாடாமல் இருந்த விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு மற்றொரு சறுக்கலாக தற்போது இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் மூன்றாவது போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Siraj-3

அதன்படி ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் தொடை பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அவர் அவதிப்பட்டார். இரண்டாவது இன்னிங்சின் போது அவர் பந்துவீசி இருந்தாலும் அவருடைய இந்த தசை பிடிப்பினை மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : யார் என்ன சொன்னாலும் அடுத்த போட்டியில் அவங்க 2 பேரும் விளையாடுவாங்க – உறுதியளித்த கே.எல் ராகுல்

இப்படி தசைப்பிடிப்பு ஏற்பட்டு மீண்டும் உடனடியாக திரும்புவது கடினம் என்றாலும் அவர் விளையாடும் அளவிற்கு தகுதி இல்லை எனில் நிச்சயம் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அணியில் அனுபவ வீரர்களான இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்றோர்கள் இருப்பதால் சற்றே நிம்மதியடையலாம்.

Advertisement