இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜனா ? அஷ்வினா ? – கம்பீர் அளித்த பதில்

Harbhajan

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இடையே சிறந்த ஆஃப் ஸ்பின்னர் யார்? டெஸ்டில் அஸ்வின் 400 விக்கெட்டுகளை தாண்டிய பின்னர் இந்த கேள்வி மீண்டும் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கேட்க்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது டெஸ்டின் போது அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தினார்.அதன் பின்னர் இந்த கேள்வி எழத்தொடங்கியது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரை வீழ்த்தி அஸ்வின் இந்த மைல்கல்லை எட்டினார்.

Ashwin

அஸ்வின் தனது 77 வது ஆட்டத்தில் இந்த சாதனையை அடைந்த பின்னர் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அதிவேக இந்திய வீரராக தன்னை முன்னிலை படுத்தி கொண்டார். உலக அளவில் அதாவது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய அதிவேக வீரர்களின் பட்டியலில் புகழ்பெற்ற முத்தையா முரளிதரனுக்குப் பின்னால் அவர் இருக்கிறார். ஹர்பஜன் சிங்கின் மொத்தமாக எடுத்த 417 விக்கெட்டுகளை கடந்த அஸ்வினுக்கு இன்னும் 17 விக்கெட்டுகள் தேவை. ஹர்பஜன் 103 ஆட்டங்களில் தனது 417 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஹர்பஜனை விட மிகக் குறைந்த ஆட்டங்களில் அஸ்வின் 417 டெஸ்ட் விக்கெட்டுகளை தாண்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனில் கும்ப்ளே (619) மற்றும் கபில் தேவ் (434) ஆகியோருக்குப் பின்னால் இந்தியாவின் மூன்றாவது மிகச் சிறந்த பந்து வீச்சாளராக தன்னை முன்னிலை படுத்தி கொள்ள அந்த இடத்தில் இருக்கும் ஹர்பஜனை பின்னுக்கு தள்ளி மேல் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.இது ஒருபுறம் இருக்க அவர் ஹர்பஜனை விட சிறந்தவரா ? இல்லையா ? என்பது பற்றிய விவாதம் பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.

Ashwin-Harbhajan

இந்த பேச்சு எழுந்த வேளையில் கம்பீர் தனது கருத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.கம்பீரைப் பொருத்தவரை, ஹர்பஜன் தான் இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் ஆவார். அதே நேரத்தில், அஸ்வின் தற்போதைய கிரிக்கெட் உலகின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார். ஹர்பஜன் பற்றி பேசிய அவர் , ஹர்பஜன் தன்னுடைய உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த வேளையில் நாம் ஒப்பிடும்போது அஸ்வினை விட ஹர்பஜன் தான் ஒரு ஆக சிறந்த பந்து வீச்சாளர் என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்த தொகுப்பாக தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஹர்பஜனை விட அஸ்வின் சிறந்தவர் தான் என்று கூறி கம்பீர் முடித்தார்.

- Advertisement -

“சகாப்தங்களை ஒப்பிடுவது கடினம், ஆனால் இந்த நேரத்தில் எல்லாவற்றையும் நான் உணர்கிறேன், ஹர்பஜன் உச்சத்தில் இருக்கும்போது அவரை நான் இன்னும் சிறப்பாகவே மதிப்பிடுவேன். இந்த நேரத்தில் அஸ்வின் அநேகமாக உலகின் மிகச் சிறந்த ஆஃப்-ஸ்பின்னர் ஆவார். ஆனால் நான் ஹர்பஜன் சிங்குடன் ஒப்பிட வேண்டும் என்றால் அந்த காலக்கட்டத்தில் அவர் டி.ஆர்.எஸ் இல்லாமல் விளையாடிய விக்கெட்டுக்களையும் நான் கருத்தில் கொண்டு தான் ஒப்பிட வேண்டும் ”என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

Harbhajan

“அதே நேரத்தில், ஹூபஜனுக்கு தூஸ்ரா பந்துவீசும் திறமை நன்றாக இருந்தது. ஆனால் அஸ்வினுக்கு அதில் விருப்பம் இல்லை, ஏனெனில் விரல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தூஸ்ரா வீச அனுமதிக்கப்படவில்லை. அப்படியிருந்தும் அஸ்வினின் மாறுபாட்ட பந்துவீச்சு திறன் முற்றிலும் ஒப்பற்ற ஒன்றாகும். ஆனால் தற்போது, ஹர்பஜன் சிங்குக்கு தான் எனது முன் உரிமை கொடுப்பேன். மேலும் ஒரு பந்து வீச்சாளரின் பார்வையில் இருந்து ஒப்பிட்டு பார்த்தால் அஸ்வின் அநேகமாக ஹர்பஜனை விட ஒரு சிறந்த வீரரே ஆவார் இதுவே எனனுடைய கருத்து என்று அவர் கூறி முடித்தார்.