இவர் விரைவில் டெஸ்ட் போட்டிகளில் 50 பந்தில் சதம் அடிப்பார் – கம்பீர் புகழாரம்

Gambhir

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2வது டி20 போட்டி நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக ராகுலின் அதிரடி துவக்கம் அமைந்தது. ராகுல் 32 பந்துகளில் 45 ரன்கள் அதிரடியாக விளாசினார். மேலும் ராகுலின் இந்த அசாத்தியமான பேட்டிங்கால் இந்திய அணி எளிதில் இலக்கை எட்டியது. இந்நிலையில் தற்போது தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கம்பீர் கூறும்போது : ராகுலின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. அவர் நம்ப முடியாத வகையில் தொடர்ந்து பிரமாதமாக ஆடி வருகிறார்.

நிச்சயம் அவர் விரைவில் டெஸ்ட் போட்டியில் 50 பந்துகளில் சதம் எடுப்பார் என்று நம்புகிறேன். ஒவ்வொரு முறை அவர் ஆடும் போதும் இதே போன்ற அதிரடி ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு காண்பிக்கக் கூடாது என்று நான் நினைப்பேன். டி20 போட்டிகளில் மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளிலும் அவரால் சிறப்பாக ஆட முடியும்.

rahul

அவருடைய பேட்டிங் தரம் உண்மையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டு வகை கிரிக்கெட்டிலும் 50 பந்துகளில் சதம் அடிக்கும் அளவிற்கு சிறப்பாக உள்ளது. அவரிடம் உள்ள ஷாட்டுகள் அபாரமானது விரைவில் அவர் இந்திய அணிக்காக மூன்று வகை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சிறப்பாக இதேபோன்று விளையாடுவார் என்று நான் நம்புகிறேன்.

- Advertisement -

Rahul

மேலும் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக வாய்ப்பு யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கும் ஆனால் தற்போது உள்ள சூழலில் தவான் மற்றும் ராகுல் இருவரையும் பார்க்கும் போது ராகுல் அருமையான பார்மில் உள்ளார் என்பது தெரிகிறது. தவான் கொஞ்சம் தடுமாறுகிறார் இருப்பினும் ரன்கள் அடித்திருப்பதால் அவருக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கும் என்றும் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.