இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியில் இவரை ஆட வைக்க வேண்டாம் – கம்பீர் அறிவுரை

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 578 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 218 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்துள்ளது.

pant 2

- Advertisement -

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து உள்ளதால் நாளை அஸ்வின் மற்றும் சுந்தர் ஆகியோர் பாலோ ஆனை தவிர்க்க போராடவேண்டும். மேலும் இன்னும் சில மணி நேரங்கள் களத்தில் நின்று அவர்கள் பேட்டிங் செய்தால்தான் இந்திய அணியால் நல்ல ஸ்கோரை எட்ட முடியும். இருப்பினும் நாளைய போட்டியில் இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இந்த போட்டி குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் நிச்சயம் இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் பும்ராவை விளையாட வைக்க கூடாது என்ற ஆலோசனையையும் அவர் வழங்கியுள்ளார். ஏனெனில் மூன்றாவது போட்டி அகமதாபாத்தில் பகலிரவு போட்டியாக பின்க் பந்தில் நடைபெற உள்ளது.

Bumrah

இதன் காரணமாக அவருக்கு ஓய்வளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியோடு பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஏனெனில் இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாடும் போது கூடுதலான ஓவர்களை அவர் வீச நேரிடும். அவ்வாறு அவர் ஓய்வின்றி விளையாடிக் கொண்டிருந்தால் முக்கியமான மூன்றாவது போட்டியில் அவரால் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் போகும். இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கி மற்றொரு வேகப்பந்து வீச்சாளரை பந்து வீச செய்யலாம் என்று கூறியுள்ளார்.

Bumrah

மேலும் ஏற்கனவே அவர் இந்த போட்டியில் இரண்டு ஆப் ஸ்பின்னர்களை தேர்வு செய்திருக்க கூடாது என்றும் நிச்சயம் குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement