
இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த தொடருக்கான டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவும், ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோகித் சர்மாவும் அறிவிக்கப்பட்டனர். இந்த தொடரில் தனக்கு ஓய்வு வேண்டும் என்று ஹார்டிக் பாண்டியா கேட்டுக் கொண்டதால் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் அவருக்கு பதில் ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த இலங்கை அணிக்கெதிரான தொடர் மூலமாக புதிய பயிற்சியாளராக செயல்பட இருக்கும் கௌதம் கம்பீர் எதிர்வரும் சாம்பியன்ஸ் தொடரை கணக்கில் கொண்டு பல முக்கிய சோதனைகளை இந்த தொடரில் செய்வார் என்றும் பார்க்கப்படுகிறது.
அதேபோன்று டி20 உலக கோப்பை தொடரில் மிக முக்கியமான வீரராக திகழ்ந்த ஹார்டிக் பாண்டியா சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். ஆனாலும் அவரது பிட்னஸ் ஒருநாள் போட்டிக்கு உகந்ததாக இருக்கின்றதா? என்ற ஒரு சந்தேகம் கௌதம் கம்பீருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக அவர் சில கட்டுப்பாடுகளையும் பாண்டியாவிற்கு விதித்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.
அந்த தொடருக்காக அங்கு செல்லும் வீரர்களை தவிர்த்து டெஸ்ட் விளையாடாத வீரர்கள் அனைவரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் விளையாட வேண்டும் என்றும் அந்த தொடரின் பார்மை வைத்து தான் வீரர்களின் தேர்வு இருக்கும் என்றும் கூறியுள்ளாராம். அதுமட்டும் இன்றி தனிப்பட்ட முறையில் பாண்டியாவுடன் உரையாடிய கம்பீர் :
இதையும் படிங்க : சி.எஸ்.கே வீரர் ஷிவம் துபேவுக்கு ஒருநாள் அணியிலும் வாய்ப்பு கிடைக்க காரணம் இதுதானாம் – விவரம் இதோ
விஜய் ஹசாரே தொடரில் பரோடா அணிக்காக விளையாடி 10 ஓவர்களையும் வீசி பிட்னஸ் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அப்படி முடியாமல் போகும் பட்சத்தில் பாண்டியாவை தேர்வு செய்ய மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக முழுமையாக பந்துவீசும் பிட்னஸை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் பாண்டியா உள்ளது குறிப்பிடத்தக்கது.