என்னப்பா இப்டி ஆயிடுச்சி.. சண்டை கோழியாக இருந்த இருவரும் இப்படி மாறிட்டாங்க – ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கம்பீர் கோலி

Kohli-and-Gambhir
- Advertisement -

கடந்த ஆண்டு ஆர்.சி.பி மற்றும் லக்னோ அணிகள் மோதியபோது நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோர் மைதானத்திலேயே காரசாரமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அதோடு அந்த போட்டி முடிந்து கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியிருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. அதன் காரணமாக இருவருக்குமே 100 சதவீத போட்டி கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நேற்று பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது கொல்கத்தா அணியில் மென்டராக இருக்கும் கம்பீர் மற்றும் ஆர்சிபி அணி நட்சத்திர வீரராக இருக்கும் விராட் கோலி ஆகியோருக்கு இடையே என்ன மோதல் நடைபெறப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

- Advertisement -

ஆனால் நேற்றைய போட்டியின் போது யாரும் எதிர்பாரா வகையில் களத்தில் விராட் கோலியுடன் கைகுலிக்கிய கம்பீர் அவரை கட்டியணைத்தது அன்பை பரிமாறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

எப்போதுமே சண்டைக்கோழிகளாக முட்டிக்கொள்ளும் இவர்கள் இருவரும் நேற்று புன்முறுவலுடன் அன்பை பரிமாறிக் கொண்டது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. நேற்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி அணியை கொல்கத்தா அணி வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி 182 ரன்கள் அடித்து இருந்தாலும் அதனை துரத்தி விளையாடிய கொல்கத்தா அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 186 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக பெற்றது.

இதையும் படிங்க : பெங்களூரு அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற அசத்தலான வெற்றிக்கு காரணம் இதுதான் – ஷ்ரேயாஸ் ஐயர் மகிழ்ச்சி

இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த விராட் கோலி 59 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 83 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தது குறிப்பிட்டத்தக்கது.

Advertisement