ருதுராஜ் கெய்க்வாட்டா? சுப்மன் கில்லா? தெ.ஆ அணிக்கெதிரான இன்றைய டி20 போட்டியின் – துவக்கவீரர் யார்?

Openers
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி டிசம்பர் 10-ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் அன்று பெய்த மழை காரணமாக அந்த போட்டி டாஸ் கூட போடப்படாமல் முடிவுக்கு வந்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் துவக்க வீரர்களாக யார்? யார்? இறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி இன்னும் ஐந்து சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதனால் பிளேயிங் லெவனில் மாற்றம் எவ்வாறு இருக்கும்? துவக்க வீரர்கள் யார்? யார்? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒருபுறம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இடதுகை அதிரடி துவக்க வீரர் என்பதனால் அவரது வாய்ப்பு உறுதி செய்யப்படும். ஆனால் வலது கை ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவருக்கும் இடையே துவக்க வீரராக களமிறங்க பெரிய போட்டி இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இருப்பினும் பரவலாக பேசப்படும் கருத்தின் படி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோரே துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் இந்திய அணியை பொறுத்தவரை சுப்மங்கில் தான் துவக்க வீரருக்கான வாய்ப்பில் முன்னிலை பெற்று இருக்கிறார். இதன் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் பெஞ்சில் அமர வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் 2024-ல் கம்பேக் கொடுக்க இருக்கும் ரிஷப் பண்டிற்கு வாழ்த்து தெரிவித்து – ஹர்ஷா போக்ளே பகிர்ந்த பதிவு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 223 ரன்களை குவித்து இருந்தாலும் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் அவரை விட சுப்மன் கில் அதிக அளவில் டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பதாலும், மூன்று வகையான போட்டிகளிலும் அவரே முதன்மை துவக்க வீரராக விளையாட முன்னுரிமை பெற்று வருவதாலும் அவரே இன்றைய போட்டியில் துவக்க வீரராக விளையாடுவார் என்று தெரிகிறது.

Advertisement