இடிக்கப்படும் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஆஸ்திரேலியாவின் காபா மைதானம்.. காரணம் என்ன?

Gabba Stadium
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது என்றே சொல்லலாம். பிரிஸ்பேன் நகரில் கடந்த 1895ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு தற்போது 37,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்டுள்ள இந்த மைதானத்தில் 1931 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 1988ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

அதன் பின் தொடர்ச்சியாக அனைத்து எதிரணிகளையும் அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்து வந்தது. அதனால் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சிட்னியில் நடைபெற்ற 3வது போட்டியில் காயத்தையும் பொருட்படுத்தாமல் இந்தியாவின் தோல்வியை தவிர்ப்பதற்காக பேட்டிங் செய்து கொண்டிருந்த ரவிச்சந்திரன் அஸ்வினிடம் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் “காபாவுக்கு வாருங்கள்” என்று சவால் விடுக்கும் வகையில் அறைகூவல் விடுத்தார்.

- Advertisement -

இடிக்கப்படும் காபா:
அதாவது 32 வருடங்களாக தோல்வியை சந்திக்காத எங்களின் கோட்டை மைதானத்தில் கண்டிப்பாக கடைசி போட்டியில் உங்களை தோற்கடித்து கோப்பையை வெல்வோம் என்று அவர் இந்தியாவுக்கு சவால் விட்டார். அந்த நிலைமையில் நடைபெற்ற 4வது போட்டியில் முக்கிய வீரர்கள் அனைவரும் காயமடைந்ததால் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா அபாரமாக விளையாடி காபா கோட்டையை தகர்த்து மூவர்ண கொடியை பறக்க விட்டு ஆஸ்திரேலியாவை 2 – 1 (4) என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

அதனால் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த அந்த மைதானம் 2025இல் இடிக்கப்பட உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. அதாவது வரும் 2032 ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அந்த போட்டிகள் அனைத்தும் பிரிஸ்பேன் நகரில் இருக்கும் காபா மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆனால் தற்போது காபா மைதானம் கிரிக்கெட்டுக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

எனவே 2025 ஆஷஸ் போட்டிக்கு பின் காபா மைதானம் இடிக்கப்பட்டு 2032 ஒலிம்பிக் போட்டிகளுக்காக மீண்டும் அதீத நவீன வசதிகளுடன் 2.7 ஆஸ்திரேலிய மில்லியன் டாலர்கள் செலவில் புதிதாக கட்டப்பட உள்ளதாக குயின்ஸ்லாந்து மாகாண அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன் 1956ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

இதையும் படிங்க: அதிர்ஷ்டம் இல்லாத பிளேயர்ன்னு என்னை சொல்றாங்க.. ஆனா என் நிலைமையே வேற.. சஞ்சு சாம்சன் பேட்டி

மேலும் 2000 ஒலிம்பிக் போட்டிகள் சிட்னி நகரில் நடைபெற்றது. அதை தொடர்ந்து தற்போது 2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப் போகும் 3வது ஆஸ்திரேலிய நகரமாக பிரிஸ்பேன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே அதை வெற்றிகரமாக நடத்துவதற்காக காபா மைதானம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுந்தார் போல புதிதாக கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement