அதிர்ஷ்டம் இல்லாத பிளேயர்ன்னு என்னை சொல்றாங்க.. ஆனா என் நிலைமையே வேற.. சஞ்சு சாம்சன் பேட்டி

Sanju Samson.jpeg
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அனைத்து சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி விளையாடி வருகிறது.

ஆனால் இந்த அணியிலும் கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காதது பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் 2015ஆம் ஆண்டு அறிமுகமாகி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்த அவர் 2022இல் கிடைத்த வாய்ப்புகளில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அரை சதமும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருதும் வென்றும் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் ஆதங்கம்:
அந்த வகையில் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுத்தால் அசத்துவேன் என்று நிரூபித்த அவர் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒரு அரை சதை மட்டுமே அடித்ததால் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து வந்ததால் உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

ஆனால் தற்போது 2வது தர இந்திய அணி விளையாடும் இந்த அழுத்தமற்ற சாதாரண தொடரில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அந்த வகையில் சஞ்சு சாம்சனுக்கு அதிர்ஷ்டமில்லை என்று தெரிவிக்கும் நிறைய ரசிகர்கள் வழக்கம் போல தேர்வுக் குழுவை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் அனைவரும் தம்மை அதிர்ஷ்டமற்ற வீரர் என்று சொன்னாலும் தாம் நினைத்ததை விட கிரிக்கெட்டில் போதுமானவற்றை சாதித்துள்ளதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மக்கள் அனைவரும் என்னை அதிர்ஷ்டமற்ற கிரிக்கெட்டர் என்று அழைக்கிறார்கள். ஆனால் தற்போது நான் அடைந்துள்ள இடம் நான் ஏற்கனவே நினைத்ததை விட அதிகமாக உள்ளது. மேலும் ரோகித் சர்மா தான் எப்போதும் என்னிடம் முதலாவதாக அல்லது இரண்டாவதாக பேசும் நபராக இருப்பார்”

இதையும் படிங்க: அவங்க 2 பேர் இல்லாம எந்த செலக்டரும் 2024 டி20 உ.கோ அணியை செலக்ட் பண்ணமாட்டாங்க.. ஆஷிஸ் நெஹ்ரா கருத்து

“குறிப்பாக ஹேய் சஞ்சு. ஐபிஎல் தொடரில் நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தீர்கள். நீங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தீர்கள் என்று ரோஹித் என்னிடம் அடிக்கடி கூறுவார். அந்த வகையில் அவர் எனக்கு நிறைய ஆதரவை கொடுத்து வருகிறார்” என்று கூறினார். மொத்தத்தில் இஷான் கிசான், ரிஷப் பண்ட் போன்ற விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் 2024 டி20 உலகக் கோப்பையிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement