அவங்க 2 பேர் இல்லாம எந்த செலக்டரும் 2024 டி20 உ.கோ அணியை செலக்ட் பண்ணமாட்டாங்க.. ஆஷிஸ் நெஹ்ரா கருத்து

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் லீக் மற்றும் செமி ஃபைனலில் தோல்வியை சந்திக்காமல் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்ததால் 2011 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மீண்டும் மறக்க முடியாத நெஞ்சை உடைக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. வரும் ஜூன் மாதம் நடைபெறும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் அணி விளையாடுகிறது.

- Advertisement -

ஆஷிஷ் நெஹ்ரா ஆதரவு:
முன்னதாக 2022 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் 2024 டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா போன்ற சீனியர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையை கடந்த வருடம் துவக்கிய தேர்வுக்குழு அப்படியே விராட் கோலியையும் டி20 தொடர்களில் ஒதுக்கி வருகிறது.

மேலும் பணிச்சுமைக்காக அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டாலும் 2007க்குப்பின் டி20 உலகக் கோப்பைகளில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளையும் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டி20 கேரியர் முடிந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் வரை விளையாட வேண்டுமென ஆஷிஸ் நெஹ்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 2023 உலகக்கோப்பையில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை பார்த்து அந்த 2 வீரர்களையும் எந்த தேர்வுக்குழு தலைவராலும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்ய முடியாமல் இருக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ஒரு காலண்டர் வருடத்தில் 800 – 1000 ரன்கள் குவித்து வருகிறார். அதே போல ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் விதத்திற்கு அவரை தேர்வு செய்ய எந்த செலெக்டரும் ஆர்வப்படுவார்கள்”

இதையும் படிங்க: உ.கோ ஃபைனலுக்கு பின் அந்த ஆஸி வீரர் அப்படி செஞ்சதை பார்த்தது வலிக்குது.. ஷமி ஆதங்க பேட்டி

“ரோகித் மற்றும் விராட் ஆகியோரிடம் தற்போதைக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாடாதீர்கள் அல்லது ஓய்வெடுங்கள் என்ற பேச்சுக்கள் நடத்தப் பட்டிருக்கலாம். ஆனால் ஓய்வு பெறும் வரை அவர்கள் விளையாட வேண்டும். குறிப்பாக இதே போல ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அவர்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Advertisement