- Advertisement -
இந்திய கிரிக்கெட்

16 வயதில் 1.60 கோடி.. பாகிஸ்தானை நொறுக்கி இந்தியாவை வெற்றி பெற வைத்த தமிழக வீராங்கனைக்கு ஜேக்பாட்

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் 2025 சீசனுக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தமிழக வீராங்கனை ஜி கமலினி 1.60 கோடிக்காக வாங்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில் வெறும் 16 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் சீனியர் கிரிக்கெட்டில் விளையாடாமலேயே இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ளார்.

அதற்கான காரணம் என்னவெனில் உள்ளூர் அளவில் கமலினி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இந்தியாவில் சமீபத்தில் அண்டர்-19 மகளிர் டி20 கோப்பை நடைபெற்றது. அந்த தொடரில் தமிழ்நாடு அணிக்காக கமலினி 8 போட்டிகளில் 311 ரன்களை குவித்து அசத்தினார். அந்த போட்டிகளில் அவர் 10 சிக்ஸர்களையும் அடித்து கவனத்தை ஈர்த்தார்.

- Advertisement -

16 வயதில் அசத்தல்:

மேலும் பகுதி நேர பவுலரான அவர் உள்ளூரில் இதற்கு முன் விக்கெட் கீப்பிங் வேலையையும் செய்துள்ளார். அதன் காரணமாக இந்த ஏலத்தில் 10 லட்சத்திற்கு களமிறங்கிய அவரை டெல்லி மற்றும் மும்பை அணிகள் வாங்குவதற்கு போட்டியிட்டன. அந்தப் போட்டியின் இறுதியில் மும்பை இந்தியன்ஸ் கமலினியை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

அப்படி உள்ளூரில் அசத்தியதால் கமலினி இந்தியா மகளிர் அண்டர் 19 அணிக்காகவும் தேர்வாகியுள்ளார். அந்த வாய்ப்பில் தற்போது மலேசியாவில் 2024 அண்டர்-19 மகளிர் ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் டிசம்பர் 15ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற குரூப் ஏ பிரிவின் இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

- Advertisement -

அசத்தும் கமலினி:

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சுமாராக விளையாடி 20 ஓவரில் 67-7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கோமல் கான் 24 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சோனம் யாதவ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 68 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாடிய கமலினி 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 44* (29) ரன்கள் நொறுக்கினார்.

இதையும் படிங்க: தோனிக்கு எதிராக பவுலிங் போட எனக்கு பிளான் கிடையாது.. அதுக்கு காரணம் என்ன? – அர்ஷ்தீப் சிங் ஓபன்டாக்

அவருடன் சணிக்கா சால்க் 19* (17) ரன்கள் எடுத்ததால் 7.5 ஓவரில் 68-1 ரன்களை குவித்த இந்தியா அண்டர்-19 அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. அதனால் தம்முடைய 16 வயதிலேயே கமலினி இந்திய அணிக்காக ஆட்டநாயகி விருது வென்றது தமிழக ரசிகர்களுக்கு பெருமையை கொடுக்கிறது. அவருடைய திறமைக்கு ஜாக்பாட் போல ஐபிஎல் தொடரில் 1.60 கோடிக்கு விளையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

- Advertisement -