4 ஆம் நாள் போட்டி துவங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம். காரணம் இதுதான் – தப்பிக்குமா இந்தியா?

jogannesburg
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி ஜோகனஸ்பர்க் நகரில் கடந்த 3-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் மூன்று நாட்கள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற இருந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவை.

Markram

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் 8 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் இப்படி ஒரு சுவாரஸ்யமான கட்டத்திற்கு நகர்ந்துள்ள இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கையே ஓங்கியுள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் இன்று நடைபெறயிருந்த 4-வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி சுமார் 130 மணிக்கு துவங்க இருந்தது.

ஆனால் தற்போது போட்டி திட்டமிட்டபடி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் நேற்று இரவு முழுவதும் மைதானத்தில் மழை பெய்ததன் காரணமாகவும் தற்போதும் லேசான தூரலுடன் மோசமான வானிலை இருப்பதன் காரணமாகவும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இன்று முழுவதும் மழை பெய்யும் பட்சத்தில் போட்டி நடைபெறாமல் கூட போகலாம்.

rain

அதேபோன்று நாளையும் மழை பெய்தால் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியின் தோல்வியில் இருந்து தப்பிக்க முடியும். தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு சில மணி நேரங்கள் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் கூட இந்த போட்டியில் வெற்றி பெற எளிதான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்து வரலாறு படைத்த ஆண்டர்சன் – பெரிய விஷயம்தான்

ஏனெனில் அரை சதத்தை நோக்கி நல்ல நிலையுடன் கேப்டன் டீன் எல்கர் விளையாடி கொண்டிருப்பது மட்டுமின்றி 8 விக்கெட் கையில் இருப்பதால் நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒருவேளை இரண்டு நாட்களும் மழை பெய்யும் பட்சத்தில் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியின் தோல்வியில் இருந்து தப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement