அடுத்த கேப்டனா நீங்கதான் வரணும் ! நட்சத்திர வீரருக்கு குவியும் 3 முன்னாள் கேப்டன்களின் ஆதரவு

- Advertisement -

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வந்த நட்சத்திர வீரர் ஜோ ரூட் அந்த பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார். கடந்த சில வருடங்களாக அவர் தலைமையில் அடுத்தடுத்த தொடர் தோல்விகளை இங்கிலாந்து வரிசையாக தோல்விகளை சந்தித்து வந்ததால் ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கடந்த சில மாதங்களாகவே அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்தன. காரணம் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கோப்பையை 4 – 0 என இங்கிலாந்து பறிகொடுத்தது.

Root

- Advertisement -

இருப்பினும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருந்து வரும் ஜோ ரூட் தனது நாட்டுக்காக தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்புவதாகவும் அதற்கு அணியில் உள்ள இதர வீரர்களின் ஆதரவு தமக்கு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதன் காரணமாக கடந்த மாதம் வெஸ்ட் இண்டீசில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக மீண்டும் அவரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தொடரச் செய்தது. ஆனால் அதிலும் 1 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த ஜோ ரூட் நேற்று அதிரடியாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

வெற்றிகரமான கேப்டன்:
கடந்த 2017-ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் 64 போட்டிகளில் இங்கிலாந்தை வழி நடத்தி அதில் 27 வெற்றிகளையும் 26 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் இங்கிலாந்தை வழிநடத்திய கேப்டன், அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இங்கிலாந்து கேப்டன், அதிக தோல்விகளை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் என்ற அனைத்து சாதனைகளுக்கும் சோதனைகளுக்கும் சொந்தக்காரராகியுள்ளார். என்னதான் தோல்விகளை பெற்றுக் கொடுத்தாலும் கடந்த பல வருடங்களாக இங்கிலாந்தை வழிநடத்தி வெற்றிகரமான கேப்டன் என பெயர் எடுத்துள்ள ஜோ ரூட் இடத்தில் அவருக்கு தகுதியான அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Root

கேப்டனாக பதவி விலகினாலும் கூட தொடர்ந்து ஒரு பேட்ஸ்மேனாக இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு பாடுபட உள்ள நிலையில் அடுத்த கேப்டனாக யார் பொறுப்பை ஏற்றாலும் அவர்களுக்கு ஆதரவளிக்க தயார் என ஜோ ரூட் அறிவித்துள்ளார். எனவே அவரின் ஆலோசனைகளைக் கேட்டு இங்கிலாந்தை வழிநடத்தும் அளவுக்கு தகுதியான வீரர் யார் என்ற பேச்சு வார்த்தைகள் அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் காரசாரமாக நடந்து வருகின்றன.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தான் வேண்டும்:
அந்த வகையில் உலகின் நம்பர் 1 நட்சத்திர ஆல்ரவுண்டராக ஏற்கனவே தன்னை நிரூபித்து ரசிகர்களிடையே புகழ் பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தான் அதற்கு சரியானவர் எனக்கூறும் அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அவர்தான் அடுத்த டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும் என நேரடியாகவே கோரிக்கை வைத்துள்ளனர்.

Vaughan

அந்த வகையில் இது பற்றி இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு. “பென் ஸ்டோக்ஸிடம் கிரிக்கெட் பற்றிய புத்திசாலித்தனம் உள்ளது. அணியில் உள்ள இதர வீரர்களிடம் நிறைய மரியாதை பெற்றுள்ள அவர் எப்போதுமே தம்மால் முடிந்த அனைத்தையும் கொடுப்பவர். எனவே அவரை தவிர அந்த இடத்தில் வேறு எந்த வீரரும் சிறப்பாக செயல்படுவார் என்று உத்தரவாதமாக கூற முடியாது” என கூறினார்.

- Advertisement -

இதே கருத்தை கூறியுள்ள மற்றொரு முன்னாள் இந்திய கேப்டன் மைக்கேல் அத்தர்டன் தற்போதைய நிலைமையில் பென் ஸ்டோக்ஸ் தவிர இங்கிலாந்தின் கேப்டனாக வருவதற்கு எந்த வித கேள்வியும் இன்றி வேறு யாரைப் பற்றியும் யோசிக்கத் தேவையில்லை என்று வெளிப்படையாகக் கூறினார்.

Stokes

அதேபோல் மற்றொரு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பேசியது பின்வருமாறு. “இந்த வேலையை செய்வதற்கு உடல் அளவிலும் மனதளவிலும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். எனவே ஏற்கனவே மனநிலைமை சம்பந்தமான பிரச்சனை இருந்த பென் ஸ்டோக்ஸிடம் அதுபற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய புதிய இயக்குனராக பொறுப்பேற்கும் யாராக இருந்தாலும் பேசி முடிவெடுக்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க : மும்பையை புரட்டி எடுத்த கேஎல் ராகுல் அபார சதம்! ஐபிஎல் வரலாற்றில் பிரமிக்கவைக்கும் சாதனை

ஒரு வேளை மனதளவில் அவர் அதற்கு தயாராக இல்லையெனில் மற்றொரு நட்சத்திர அனுபவம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ராட் அந்த பணியை செய்யலாம் என்றும் நாசர் உசேன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது அவர் இங்கிலாந்து அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் அதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால் அதில் அவர் சிறப்பாக செயல்பட்டு தன் மீதான விமர்சனங்களை துடைக்க வேண்டும் என்றும் நாசர் ஹுசைன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement