- Advertisement -
ஐ.பி.எல்

இந்த வருட ஐ.பி.எல் தொடரில் விளையாட முடியாமல் சிக்கலில் தவிக்கும் வெளிநாட்டு வீரர்கள் – குழப்பத்தில் அணிகள்

கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக மூன்று மைதானங்களில் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசாங்கம் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் போட்டிகள் நடத்த அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.

மேலும், இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் வரும் 20ம் தேதி துபாய் செல்ல உள்ளார்கள். துபாய் செல்வதற்கு முன்னதாக அனைத்து வீரர்கள் ஊழியர்கள் பயிற்சியாளர்கள் என அனைவருமே ஐந்து முறை கரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.இந்நிலையில் பல சிக்கல்கள் நீடித்து வரும் வேளையிலும் வெளிநாட்டு வீரர்கள் முதல் சில வாரங்களில் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் பெங்களூரு அணியின் ஏபி டிவில்லியர்ஸ், டெல்லி கேப்பிடல் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இந்த சீசனை தவறவிட வாய்ப்புள்ளது.

மேலும் பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வேகப்பந்துவீச்சாளர் சோப்ரா ஆர்ச்சர் ஆகிய முக்கிய வீரர்கள் பல போட்டிகளில் ஆடாமல் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இந்த செய்தி நிச்சயம் சம்மந்தப்பட்ட அணிகளுக்கு வருத்தத்தை அளிக்கும்.

மேலும் இதன்மூலம் சில அணிகளுக்கு வெற்றி வாய்ப்பினை குறைக்கும் வகையிலும் நிலைமை உள்ளது. இருப்பினும் இந்த சிக்கல்கள் தீர்ந்து அனைவரும் கலந்து கொண்டு இந்த தொடர் வெற்றிகரமாக நடைபெறவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by