செல்ஃப் எடுக்காத பேட்டிங் ! வரலாற்றில் முதல் முறையாக சிஎஸ்கே மோசமான சாதனை – ரசிகர்கள் வேதனை

MS Dhoni Ravi Ashwin
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 20-ஆம் தேதி நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் சந்தித்தன. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 150/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 2 (6) சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து களமிறங்கிய மொயீன் அலி பவர்பிளே ஓவர்களில் பட்டாசு வெடித்து ரன்களை விளாசினார்.

Moin Ali MS DHoni

- Advertisement -

2-வது விக்கெட்டுக்கு அமைக்கப்பட்ட 83 பார்ட்னர்ஷிப் ரன்களில் டேவோன் கான்வே வெறும் 16 (14) ரன்களில் அவுட்டாக மறுபுறம் மொய்ன் அலி அனலாக பேட்டிங் செய்தார். குறிப்பாக டிரென்ட் போல்ட் வீசிய ஒரே ஓவரில் 6, 4, 4, 4, 4, 4 என 26 தெறிக்கவிட்ட அவர் 19 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.

ஏமாற்றிய சென்னை:
ஆனால் எதிர்ப்புறம் வந்த ஜெகதீசன் 1 (4) ராயுடு 3 (6) என அவருக்கு கை கொடுக்காமல் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 95/4 என தடுமாறிய சென்னைக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி மெதுவாக விளையாடி 18-வது ஓவரில் 26 (28) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து போராடிய மொயின் அலி 13 பவுண்டரி 3 சிக்சருடன் 93 (57) ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் மற்றும் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Yashsvi Jaiswal

அதை தொடர்ந்து 151 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் 2 (5) கேப்டன் சஞ்சு சாம்சன் 15 (20) தேவ்தூத் படிக்கல் 3 (9) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுத்து தவறினாலும் மறுபுறம் பொறுப்பாகவும் சிறப்பாகவும் செயல்பட்ட இளம் தொடக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 59 (44) ரன்கள் விளாசி 15-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த சமயம் சிம்ரோன் ஹெட்மையர் 6 (7) ரன்களில் அவுட்டானதால் திடீர் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அட்டகாசமாக பேட்டிங் செய்த தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 40* (23) ரன்கள் எடுத்து யாருமே எதிர்பாராத வகையில் அற்புதமான பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.4 ஓவரில் 151/5 ரன்களை எடுத்த ராஜஸ்தான் சூப்பர் வெற்றி பெற்றது.

- Advertisement -

மோசமான தோல்வி:
இதனால் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்த ராஜஸ்தான் 14 போட்டிகளில் 9-வது வெற்றியை பதிவு செய்து லக்னோவை பின்னுக்கு தள்ளி 2-வது இடம் பிடித்து குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. மறுபுறம் ஏற்கனவே தொடர் தோல்விகளால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சென்னை இந்த கடைசி போட்டியிலும் ஆறுதல் வெற்றியைத் பெறாமல் 14 போட்டிகளில் 10-வது தோல்வியை பதிவு செய்து தோல்வியுடன் தனது பயணத்தை முடித்தது.

CSK MS Dhoni Ravindra Jadeja

1. 4 கோப்பையை வென்று வெற்றிகரமான 2-வது ஐபிஎல் அணியாக சாதனை படைத்த நடப்பு சாம்பியன் சென்னை அபாரமாக செயல்பட்டு கோப்பையை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்த அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பையும் பாதி கோட்டை விட்டது.

- Advertisement -

2. மேலும் ஒவ்வொரு வருடமும் எப்படியாவது பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என கருதப்பட்ட அந்த அணி 2020க்கு பின் வரலாற்றில் 2-வது முறையாக மீண்டும் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அவமானத்தைச் சந்தித்தது.

CSK Ms DHoni

3. அத்துடன் முதல் முறையாக ஒரு சீசனில் 10 தோல்விகளை பதிவு செய்த சென்னைக்கு வரலாற்றிலேயே இதுதான் மோசமான வருடமாக அமைந்துள்ளது. இதற்கு முன் 2012, 2020 ஆகிய சீசன்களில் அதிகபட்சமாக 8 தோல்விகளை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

பேட்டிங் மோசம்:
இந்த தோல்விகளுக்கு கேப்டன்ஷிப் மாற்றம், சுமாரான பவுலிங் என்பதையும் தாண்டி படுமோசமான பேட்டிங் முக்கிய காரணமாகிறது. ஏனெனில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் தான் எந்த ஒரு சென்னை பேட்ஸ்மேனும் 400 ரன்களைக் கூட எடுக்கவில்லை. அதிகபட்சமாக ருதுராஜ் கைக்வாட் 366 ரன்களை மட்டும் எடுத்தார். அந்த பட்டியல் இதோ:
1. ரெய்னா/தோனி (2008)
2. ரெய்னா/ஹெய்டன் (2009)
3. ரெய்னா/முரளி விஜய் (2010)
4. ரெய்னா/ஹசி/விஜய் (2011)
5. ரெய்னா (2012)
6. ரெய்னா/தோனி/ஹசி (2013)
7. ரெய்னா/ஸ்மித்/மெக்கல்லம் (2014)
8. மெக்கல்லம் (2015)
9. ரெய்னா/ராயுடு/தோனி/வாட்சன் (2018)
10. தோனி (2019)
11. டு பிளேஸிஸ் (2020)
12. ருதுராஜ் (2021)

இதையும் படிங்க : 2020இல் சிக்கியும் திருந்தல ! மீண்டும் ஏடாகூட வர்ணனையால் ஜாம்பவானை விளாசும் ரசிகர்கள் – அப்படி என்ன சொன்னாரு?

இந்த போட்டியில் கூட முதல் 6 ஓவர்களில் மொய்ன் அலி அதிரடியால் 75/1 ரன்களை எடுத்த சென்னை அடுத்த 14 ஓவர்களில் வெறும் 75/6 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியது. மேலும் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம்தான் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி 5 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. மொத்தத்தில் சுரேஷ் ரெய்னா, மைக் ஹசி, ஹெய்டன் என ரன் மழை பொழிந்த பேட்ஸ்மேன்களை கொண்ட அணியான சென்னைக்கு இம்முறை செல்ஃப் எடுக்காத பேட்டிங் தோல்விக்கான பல காரணங்களில் முதன்மையானதாக அமைந்தது அந்த அணி ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement