2020இல் சிக்கியும் திருந்தல ! மீண்டும் ஏடாகூட வர்ணனையால் ஜாம்பவானை விளாசும் ரசிகர்கள் – அப்படி என்ன சொன்னாரு?

Gavaskar
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 20-ஆம் தேதி நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை தோற்கடித்த ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் வெறும் 150/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் அந்த அணிக்கு பவர்ப்ளே ஓவர்களில் பட்டாசாக செயல்பட்ட மொயின் அலி அதிரடியாக செயல்பட்டு 13 பவுண்டரி 3 சிக்சருடன் 93 (57) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் ருதுராஜ் கைக்வாட் 2 (6) டேவோன் கான்வே 16 (14) ஜெகதீசன் 1 (4) எம்எஸ் தோனி 26 (28) என எதிர்புறம் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி தோல்வியை உறுதி செய்தனர்.

அதுவும் முதல் 6 ஓவர்களில் 75/1 ரன்களை எடுத்த அந்த அணியை அடுத்த 14 ஓவர்களில் அற்புதமாக பந்துவீசிய ராஜஸ்தான் 6 விக்கெட்டுகளை எடுத்து 75 ரன்கள் மட்டுமே கொடுத்து மடக்கி பிடித்தது. அந்த அணிக்கு பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் மற்றும் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

- Advertisement -

திரும்பிய ஹெட்மயர்:
அதை தொடர்ந்து 151 என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் சிறப்பான பேட்டிங் செய்து 8 பவுண்டரி 1 சிக்சருடன் 59 (44) ரன்கள் எடுத்து 15-வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் ஜோஸ் பட்லர் 2 (5) கேப்டன் சஞ்சு சாம்சன் 15 (20) படிக்கள் 3 (9) என சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். குறிப்பாக அந்த அணியின் பினிஷராக கருதப்படும் சிம்ரோன் ஹெட்மையர் 6 (7) ரன்களில் அவுட்டானதால் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் அதற்கு அஞ்சாத தமிழகத்தின் அஸ்வின் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 40* (23) ரன்களுடன் அதிரடியான பினிஷிங் கொடுத்ததால் 19.4 ஓவரில் 151/5 ரன்களை எடுத்த ராஜஸ்தான் வென்றது.

இதனால் 14 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்ற ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் அதே 18 புள்ளிகளைப் பெற்ற லக்னோவை முந்தி 2-வது இடத்திற்கு முன்னேறி குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்துடன் மோதுவதற்கு தயாரானது. முன்னதாக ராஜஸ்தானுக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரோன் ஹெட்மையர் கடந்த வாரம் தனது குழந்தை பிறப்பதை பார்ப்பதற்காக தாயகம் திரும்பி விட்டு வந்ததால் கடந்த சில போட்டிகளில் பங்கேற்காத நிலையில் இந்த போட்டியில் மீண்டும் களமிறங்கினார்.

- Advertisement -

கவாஸ்கர் வர்ணனை:
அதிலும் 104/4 என்ற நிலைமையில் ராஜஸ்தான் தவித்தபோது கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் வழக்கமாக அதிரடியாக பேட்டிங் செய்து பினிஷிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 ரன்களில் அவுட்டானார். அப்போது அதை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனை செய்து கொண்டிருந்த சுனில் கவாஸ்கர் “சிம்ரோன் ஹெட்மயரின் மனைவி டெலிவரி செய்துவிட்டார் (பிரசவமாகி விட்டார்), தற்போது அவர் (ஹெட்மயர்) ராஜஸ்தானுக்கு டெலிவரி (வெற்றியை) செய்வாரா?” என்று வர்ணனை செய்தார். அதைக்கேட்ட பெரும்பாலான ரசிகர்கள் அதிருப்தியடைந்து ஜாம்பவான் பேசும் பேச்சா இது என்று சமூக வலைதளங்களில் அவரை விளாசி வருகின்றனர்.

ஏனெனில் விளையாட்டில் வெற்றியோ தோல்வியோ அதில் விளையாடும் வீரர்கள் மட்டுமே வர்ணனை செய்ய வேண்டும் என்ற நிலையில் அவரின் குடும்பத்தை இழுத்து வர்ணனை செய்வதில் என்ன நியாயம், என்ன அவசியம் என்று ரசிகர்கள் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் அவரின் அந்த குறிப்பிட்ட வர்ணனை வரிகள் இரட்டை அர்த்தம் கொண்டதாக இருப்பதால் ரசிகர்கள் கோபம் அடைகின்றனர்.

- Advertisement -

இன்னும் திருத்தல:
கடந்த பல வருடங்களாக வர்ணனை செய்து வரும் அவர் இதுபோல சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஆம் 2020 ஐபிஎல் தொடர் துபாய்க்கு மாற்றப்பட்டு கடுமையான லாக் டவுன் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றது. அப்போது பெங்களூருவுக்காக விளையாடும் இந்திய நட்சத்திரம் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மா பந்து வீசி பயிற்சி எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் பின்னர் நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு பங்கேற்ற ஒரு போட்டியில் விராட் கோலி பெரிய ரன்கள் எடுக்காத நிலையில் அவர் அவுட்டானபோது “லாக் டவுன் சமயத்தில் விராட் கோலி அனுஸ்கா சர்மாவின் பந்துகளில் மட்டுமே பயிற்சி எடுத்துள்ளார்” என்று இரட்டை அர்த்தத்தில் வர்ணனை செய்தார்.

அவரின் அந்த வார்த்தைகள் இப்போது போலவே ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில் எப்படி நீங்கள் இவ்வாறு பேசலாம், விளையாட்டில் குடும்பத்தை இழுத்து பேசுவதற்கு என்ன அவசியம் வேண்டியுள்ளது என அதற்கடுத்த நாளே விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுனில் கவாஸ்கரை சரமாரியாக விமர்சித்திருந்தார். இறுதியில் விளையாட்டாக தாம் கூறிய வார்த்தைகள் தவறாக அனைவரும் எடுத்துக் கொண்டு விட்டனர் என்று சுனில் கவாஸ்கர் மழுப்பினார்.

இதையும் படிங்க : ராக்கெட்டாக எழுந்து முக்கிய நேரத்தில் புஷ்வானமாய் ஏமாற்றும் நட்சத்திர வீரர் – ரசிகர்கள் கவலை

அந்த நிலைமையில் மீண்டும் அதே போல் பேசியுள்ள அவரை அனுஷ்கா சர்மாவிடம் கொட்டு வாங்கியும் இன்னும் திருந்தவில்லை என்று ரசிகர்கள் விளாசுகின்றனர்.

Advertisement