ராக்கெட்டாக எழுந்து முக்கிய நேரத்தில் புஷ்வானமாய் ஏமாற்றும் நட்சத்திர வீரர் – ரசிகர்கள் கவலை

Simarjeet Singh Jos Buttler
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 20-ஆம் தேதி நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை மண்ணை கவ்வ வைத்த ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் வெறும் 150/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு 3-வதாக களமிறங்கி பவர் பிளே ஓவர்களில் பட்டையை கிளப்பிய மொயின் அலி கடைசி ஓவர் வரை அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 13 பவுண்டரி 3 சிக்சருடன் 93 (57) ரன்கள் எடுத்து அட்டகாசமாக பேட்டிங் செய்தார்.

Yashsvi Jaiswal

- Advertisement -

ஆனால் ருதுராஜ் கைக்வாட் 2 (6) டேவோன் கான்வே 16 (14) ஜெகதீசன் 1 (4) ராயுடு 3 (6) என எதிர்ப்புறம் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தனர். அதனால் 95/4 என சரிந்த சென்னைக்கு கேப்டன் தோனியும் மெதுவாக பேட்டிங் செய்து 26 (28) ரன்கள் மட்டுமே எடுத்தார். குறிப்பாக முதல் 6 ஓவர்களில் 75/1 ரன்களை எடுத்த அந்த அணி அடுத்த 14 ஓவர்களில் 75/5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தனக்குத்தானே உறுதி செய்தது.

முன்னேறிய ராஜஸ்தான்:
அதை தொடர்ந்து 151 என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக 8 பவுண்டரி 1 சிக்சருடன் 59 (44) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் அட்டகாசமாக பேட்டிங் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 40* (23) ரன்கள் எடுத்து அற்புதமான பினிஷிங் கொடுத்தார. அதனால் 19.4 ஓவரில் 151/5 ரன்களை எடுத்த ராஜஸ்தான் 14 போட்டிகளில் 9-வது வெற்றியை பதிவு செய்து கூடுதல் ரன்ரேட் பெற்று அதே 18 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோவை 3-வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது.

MS Dhoni Ravi Ashwin

அதனால் பிளே ஆப் சுற்றில் தோற்றாலும் மீண்டும் ஒரு வாய்ப்பு என்ற பெருமையை கொண்ட குவாலிபயர் 1 போட்டியில் முதலிடம் பிடித்த குஜராத்தை வரும் மே 24ல் அந்த அணி எதிர்கொள்கிறது. மறுபுறம் ஏற்கனவே தொடர் தோல்விகளால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த சென்னை கடைசி போட்டியிலும் ஆறுதல் வெற்றியை கூட சுவைக்காமல் பங்கேற்ற 14 போட்டிகளில் வரலாற்றில் முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்து பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

ராக்கெட் பட்லர்:
முன்னதாக இந்த வருட ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ள நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் இப்போட்டியில் மீண்டும் 2 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இந்த வருட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆரம்பக்கட்ட போட்டிகளில் அதிரடி சரவெடியாக அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் எதிரணிகளை பந்தாடி வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

buttler 1

1. குறிப்பாக முதல் 7 போட்டிகளில் அடுத்தடுத்த 2 போட்டிகளில் சதமடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.

- Advertisement -

2. மேலும் முதல் 7 போட்டிகளில் 3 சதங்களை தெறிக்கவிட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் முதல் பாகத்தில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். மொத்தம் 7 போட்டிகளில் 3 அரை சதங்கள் 3 சதங்கள் உட்பட 491 ரன்களை 81.83 என்ற மிரள வைக்கும் சராசரியில் 161.51 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அசத்தினார்.

Jos Buttler 100 vs MI

3. அதனால் 2016இல் 973 ரன்களை சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக ஆல் டைம் சரித்திர சாதனை படைத்த விராட் கோலியின் சாதனையை அவர் நிச்சயம் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

புஷ்வானமாய்:
ஆனால் ராக்கெட் வேகத்தில் பறந்த அவர் அடுத்த 7 போட்டிகளில் அப்படியே புஷ்வானமாய் மாறிப் போய் விட்டார் என்றே கூறலாம். ஏனெனில் அடுத்த 7 போட்டிகளில் 1 அரைசதம் மட்டுமே அடித்து வெறும் 138 ரன்களை 19.71 என்ற மோசமான சராசரியில் 111.29 என்ற அதைவிட மோசமான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து வருவதால் விராட் கோலியின் சாதனையை தொடக்கூட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் அவரின் மோசமான பார்ம் அந்த அணி நிர்வாகத்துக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது.

Jos Buttler Clean Bowled

ஏனெனில் 2008இல் முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற அந்த அணி அதன்பின் கடந்த பல வருடங்களாக 2-வது கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வருகிறது. ஆனால் இம்முறை அதை கிட்டத்தட்ட நெருங்கியுள்ள அந்த அணிக்கு கோப்பையை எட்டி பிடிக்க நாக் அவுட் சுற்றில் பட்லர் போன்ற தரமான வீரரின் அதிரடியான ஆட்டம் தேவைப்படுகிறது.

இதையும் படிங்க : கேட்ச் பிடிப்பதில் ரோஹித் சர்மா, ஜடேஜாவின் ஆல் டைம் சாதனையை தகர்த்த இளம் வீரர் – முழு விவரம்

எனவே நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக அவரின் பார்ம் கண்டிப்பாக ராஜஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த பொறுப்பை உணர்ந்து அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அந்த அணி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Advertisement