மீண்டும் ஒரு அவமான வரலாற்று சாதனை படைத்த மும்பை – இவங்களுக்கு இப்படி ஒரு நிலையா

MI Jaspirt Bumrah
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் உச்சகட்ட பரபரப்பில் நடைபெற்று வரும் நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் இந்த தொடரில் எந்தவித பரபரப்பும் இல்லாமல் ஒரே மாதிரியாக தொடர்ந்து தோல்வி முகமாக அமைந்து வருகிறது. இந்த வருடம் ஏற்கனவே 8 தோல்விகளை பெற்ற அந்த அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்து லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறிய நிலையில் எஞ்சிய போட்டிகளிலாவது ஆறுதல் வெற்றி அடையும் என எதிர்பார்த்த அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. குறிப்பாக மே 9-ஆம் தேதி நடைபெற்ற 56-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்ட அந்த அணி மீண்டும் 52 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.

Rohit Sharma vs KKR Shreyas Iyer

- Advertisement -

நவிமும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் இத்தனைக்கும் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்களில் 165/9 ரன்களை சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கி 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வெங்கடேஷ் ஐயர் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 43 (24) ரன்களும் அஜிங்கிய ரஹானே 25 (24) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மும்பை பரிதாபம்:
நடுவரிசையில் நித்திஸ் ராணா அதிரடியாக 3 பவுண்டரி 4 சிக்சர்கள் பறக்கவிட்டு 43 (26) ரன்கள் எடுத்தாலும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 6 (8) ஆண்ட்ரே ரசல் 9 (5) போன்ற முக்கிய வீரர்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் மும்பை அபாரமாக பந்துவீசி கட்டுப்படுத்தியது. இறுதியில் ரிங்கு சிங் 23* (19) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் அந்த அணி 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

ROhit Sharma MI vs KKR

அதை தொடர்ந்து 166 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 (6) திலக் வர்மா 6 (5) ரமந்தீப் சிங் 12 (16) டிம் டேவிட் 13 (9) என முக்கிய வீரர்கள் அனைவரும் கொல்கத்தாவின் அபார பந்துவீச்சில் சீரான இடைவெளிகளில் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்கள். ஒரு கட்டத்தில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 51 (43) ரன்கள் எடுத்து போராடிய இஷான் கிஷானும் ஆட்டமிழக்க நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட்டும் 15 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மும்பை 113 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

- Advertisement -

அவமான சாதனை:
கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஆண்ட்ரே ரசல் 2 விக்கெட்டுகளையும் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்கள். இதனால் பங்கேற்ற 12 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்த அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

Mumbai Indians MI

1. மறுபுறம் இதுவரை மும்பை பங்கேற்ற 11 போட்டிகளில் 2 வெற்றி 9 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது.

- Advertisement -

2. முன்னதாக இந்த வருடம் ஏற்கனவே தனது முதல் 8 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்த அந்த அணி ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் 8 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனை படைத்தது.

MI Mumbai Indians

3. 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த மும்பைக்கு அதுவே மிகப்பெரிய அவமானமாக அமைந்தது. அந்த நிலையில் நேற்றைய போட்டியில் 9-வது முறையாக தோல்வியடைந்த அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 9 போட்டிகளில் தோல்வியடைந்து மீண்டும் ஒரு பெருத்த மோசமான வரலாற்று படைத்து அவமானத்தை சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடர்களில் ஒரு சீசனில் மும்பை பதிவு செய்த அதிகபட்ச தோல்விகள் இதோ:
1. 2022* : 9 தோல்விகள்
2. 2009, 2014, 2018 : தலா 8 தோல்விகள்

MI vs LSG

இப்படி ஒரு நிலையா:
மேலும் இதுவரை நடைபெற்ற 14 சீசன்களில் ஒருமுறைகூட புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை மும்பை பிடித்ததே கிடையாது. ஆனால் தற்போதைய நிலைமையில் பார்த்தால் அந்த அவமானத்தையும் மும்பை இந்த வருடம் விரைவில் சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் 9-வது இடத்தில் இருக்கும் சென்னை கூட 8 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் மும்பை 4 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்தை மிகவும் வலுவாக பிடித்துள்ளது.

இத்தனைக்கும் சென்னை உட்பட எஞ்சிய 9 அணிகளுக்கு கிடைக்காத சொந்த மண்ணில் விளையாடும் பொன்னான வாய்ப்பு மும்பைக்கு கிடைத்த போதிலும் அந்த அணி தொடர் தோல்விகளில் இருந்து மீள முடியவில்லை. இருப்பினும் அடுத்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று கடைசி இடத்தை பிடிக்காமல் குறைத்தது 9-வது இடத்தை மும்பை பிடிக்குமா என்ற பரிதாபமான எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை எதிரணிகளை மிரட்டி அடுத்தடுத்த கோப்பைகளை வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கப் போட்டி போட்ட அணிக்கு இப்படி ஒரு நிலையா என்று பல ரசிகர்கள் மும்பை மீது பரிதாபப்படுகின்றனர்.

Advertisement