ரசிகர்களை மகிழ்விப்பதில் ஐபிஎல் வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட 2022 சீசன் – பிரமாண்ட வளர்ச்சி தான்

IPL 2022 (2)
Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண தொடராக துவங்கப்பட்ட இந்த ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் தன்னை தானே மெருகேற்றி கொண்டு பல பரிணாமங்களை கண்டு இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த அபரீத வளர்ச்சியால் 2010க்கு பின் மீண்டும் புதிதாக 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டு 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் இந்த வருடம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

IPL

இந்த தொடரில் நிறைய கோப்பைகளை வென்ற வெற்றிகரமான ஐபிஎல் அணிகளான மும்பையும் சென்னையும் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடங்களை பிடித்து முதல் 2 அணிகளாக லீக் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்கள் எதிர்பாராத மிகப்பெரிய ட்விஸ்ட் போல அமைந்தது. அதைவிட பெரிய ட்விஸ்ட் என்னவெனில் நேற்று முளைத்த காளான்களைப் போல இந்த வருடம் புதிதாக விளையாடிய குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தேவையான வெற்றிகளால் டாப் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று ரசிகர்களை வியக்க வைத்தது.

- Advertisement -

பிளே ஆஃப்:
அதேபோல் வரலாற்றின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த வருடம் அசத்தலாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 4-வது இடத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய போட்டியில் டெல்லியை தோற்கடித்து மும்பை செய்த உதவியாலும் அதிர்ஷ்டத்தாலும் காப்பாற்றப்பட்ட பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதையடுத்து பைனலில் விளையாட போகும் அணிகளை தீர்மானிக்கும் முக்கியமான நாக்-அவுட் சுற்று போட்டிகள் மே 24 – 27 ஆகிய தேதிகளில் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

LSG vs GT Preview

இதில் மே 24இல் முதல் 2 இடங்களை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் குவாலிபயர் 1 போட்டியிலும் மே 25இல் அடுத்த 2 இடங்களை பிடித்த லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் எலிமினேட்டர் போட்டியிலும் மோதுகின்றன. இந்தப் போட்டிகளில் அற்புதமாக செயல்பட்டு பைனலுக்கு முன்னேறும் முனைப்பில் மேற்குறிப்பிட்ட 4 அணிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தை சென்றடைந்தது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

கடைசி லீக் போட்டி:
முன்னதாக இந்த வருடம் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் கடைசி போட்டி நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்த பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. ஆறுதல் வெற்றிக்காக நடைபெற்ற அந்த சம்பிரதாய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் பஞ்சாப்பின் தரமான பந்துவீச்சில் 20 ஓவர்களில் 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 43 (32) ரன்கள் எடுக்க பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ப்ரீட் ப்ரார் மற்றும் நாதன் எலிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Liam Livinstone Six 2

அதன்பின் 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய பஞ்சாப் அதிரடியாக பேட்டிங் செய்து வெறும் 15.1 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு 2 பவுண்டரி 5 சிக்சர்களை பறக்கவிட்ட லியம் லிவிங்ஸ்டன் 49* (22) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். அதனால் ஆறுதல் வெற்றியடைந்த பஞ்சாப் 14 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்து 6-வது இடத்திற்கு முன்னேறி வெற்றியுடன் வீட்டுக்கு கிளம்பியது.

- Advertisement -

சிக்ஸரில் உச்சம்:
பொதுவாக ஐபிஎல் என்றாலே அதில் பறக்கவிடப்படும் அதிரடி சரவெடியான சிக்ஸர்களை தான் பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் நேற்றைய போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 15 சிக்சர்களை பறக்க விட்டன. இந்த சிக்சர்களையும் சேர்த்து இந்த வருடம் இதுவரை நடைபெற்ற 70 போட்டிகளில் 1000 சிக்ஸர்களை மழையாக பொழிந்த பேட்ஸ்மேன்கள் ரசிகர்களை உச்சபட்ச மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளனர். அதிலும் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் தான் ஒரு சீசனில் 1000 சிக்ஸர்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. கடந்த 2011இல் இதேபோல் 10 அணிகள் விளையாடிய போதிலும் 800 சிக்ஸர்கள் கூட அடிக்க படவில்லை.

fans

ஆனால் இப்போதுதான் வரலாற்றில் உச்சபட்சமாக 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 4 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இது 1100 தொடுவதற்கு வாய்ப்புள்ளது. மொத்தத்தில் பல உச்சங்களை எட்டிய ஐபிஎல் சிக்ஸர் அடிப்பதிலும் வரலாற்றில் மிகப்பெரிய உச்சத்தை கண்டுள்ளது உண்மையாகவே அதன் பிரம்மாண்ட வளர்ச்சியை காட்டுகிறது. அந்த பட்டியல் இதோ:

இதையும் படிங்க : நல்லவேளை நான் எடுத்த அந்த முடிவுதான் என்னை காப்பாற்றியது – இந்திய அணிக்கு தேர்வான புஜாரா மகிழ்ச்சி

1. 1000* – 2022* சீசன்
2. 872 – 2018 சீசன்
3. 784 – 2019 சீசன்
4. 734 – 2020 சீசன்
5. 731 – 2012 சீசன்

Advertisement