நல்லவேளை நான் எடுத்த அந்த முடிவுதான் என்னை காப்பாற்றியது – இந்திய அணிக்கு தேர்வான புஜாரா மகிழ்ச்சி

Cheteswar Pujara 170 County
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த தொடர் முடிந்ததும் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களுக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் முதலில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு கேஎல் ராகுல் தலைமையில் தற்போதைய ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுக்கும் சீனியர் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொடர் முடிந்ததும் வரும் ஜூலை 1-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கடந்த வருடம் கிடப்பில் போட்டு வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நடைபெறுகிறது.

INDvsENG

- Advertisement -

அந்த போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முதன்மையான நட்சத்திர வீரர்கள் திரும்பியுள்ளனர். அந்த அணியில் பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பரத் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் காயத்தால் விலகிய ரவீந்திர ஜடேஜா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

புஜாரா கம் பேக்:
அதில் மிகவும் திரும்பிப் பார்க்கும் அம்சம் என்னவெனில் மூத்த நட்சத்திர அனுபவ வீரர் புஜாரா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2011இல் அறிமுகமாகி ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்கு பின் அவரைப் போலவே அவரின் இடத்தில் பொறுமையாகவும் நிதானமாகவும் எதிரணி பவுலர்களை களைப்படைய வைத்து ரன்களை குவித்து பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவரை அனைவரும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கின்றனர்.

pujara 1

இந்தியா சரியும் போதெல்லாம் களத்தில் நங்கூரமாக நின்று பொறுமையின் சிகரமாய் பேட்டிங் செய்யக்கூடிய அவர் 2019இல் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து தொடரை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் துருப்புச் சீட்டாக செயல்பட்டார். அந்த தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற அவர் அதற்குப் பின் 3 வருடங்களாக ஒருசதம் கூட அடிக்க முடியாமல் திணறி வந்த காரணத்தால் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற இலங்கை டெஸ்ட் தொடரின்போது நீக்கப்பட்டார்.

- Advertisement -

கவுண்டி கலக்கல்:
இருப்பினும் மனம் தளராத அவர் அதன்பின் நடந்த ரஞ்சி கோப்பையில் 5 இன்னிங்சில் 2 அரைசதங்கள் மட்டுமே அடித்து சிறப்பாக செயல்பட தவறிய நிலையில் ஐபிஎல் 2022 தொடரிலும் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. அதன் காரணமாக இந்திய அணிக்குள் நுழைய வேறு வழியே தெரியாத அவர் இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய அவர் முதல் போட்டியிலேயே 3 வருடங்களுக்கு பின் இரட்டை சதமடித்து பார்முக்கு திரும்பினார்.

Pujara County Hat Trick

அதோடு நிற்காமல் ஹாட்ரிக் சதங்களை விளாசி ஒவ்வொரு போட்டியிலும் ரன் மழை பொழிந்து மொத்தம் பங்கேற்ற 8 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் 2 இரட்டை சதங்கள் என் மொத்தம் 720 ரன்களை 120.00 என்ற இமாலய சராசரியில் குவித்து முரட்டுத்தனமான பார்முக்கு திரும்பினார். ஏற்கனவே நிறைய அனுபவம் பெற்றுள்ள அவர் பார்ம் இல்லாத காரணத்தாலேயே இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது. ஆனால் அந்த இழந்த பார்மை இரட்டை மடங்கு மீட்டெடுத்து கதவை சாத்தமாக தட்டியதால் வேறு வழியின்றி மீண்டும் தேர்வு குழுவினர் அதே இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்துள்ளனர்.

- Advertisement -

ஐபிஎல் விளையாடல:
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அவர் நல்ல வேளையாக ஐபிஎல் 2022 தொடரில் தம்மை யாரும் வாங்கவில்லை என்றும் அதன் காரணமாகத்தான் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி இந்திய அணிக்குள் மீண்டும் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சமீபத்தில் சிறப்பாக செயல்பட்ட என்னுடைய செயல்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டு இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

Pujara

இங்கிலாந்து மண்ணில் என்னால் நிச்சயம் விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் கவுண்டி தொடரில் விளையாடினேன். ஒருவேளை ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக எனக்கு வாய்ப்பு கிடைத்து இருக்காது. வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு மட்டுமே கிடைத்திருக்கும். போட்டியில் விளையாடுவதற்கும் வலைப்பயிற்சியில் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது”

இதையும் படிங்க : ஜடேஜா மாதிரியே அவரும் கேப்டன்ஷிப் செய்ய செட்டாக மாட்டாரு – இந்திய வீரர் பற்றி ரவி சாஸ்திரி

“என்னுடைய பழைய பார்மை திருப்பி எடுப்பதற்காக தான் கவுண்டியில் விளையாட சம்மதித்தேன். இந்தியாவில் (ரஞ்சி) விளையாடிய போது கூட எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் கவுண்டியில் விளையாடிய போது எனது பார்மை மீட்டெடுத்ததால் அந்த நம்பிக்கை தோன்றியது. என்னை பொருத்தவரை பார்ம் என்பது 100 – 150 ரன்கள் அடிப்பது கிடையாது. அந்தப் பெரிய ஸ்கோர்களின் வாயிலாக என்னுடைய கவனத்தையும் நம்பிக்கையையும் மீட்டெடுத்த எனக்கு அனைத்தும் சாதகமாக மாறியது” என்று கூறினார்.

Advertisement