பணவெறி தீராத பிசிசிஐ ! ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக நிகழும் மாற்றம் – விவரம் இதோ

IPL
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் துவங்கி மே 29ம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது.

Ganguly-ipl
IPL MI

இதில் வரும் மார்ச் 26 – மே 22 வரை நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று போட்டிகளுக்கான முழு அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

- Advertisement -

தயாராகும் அணிகள்:
இந்த 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முழுவதும் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில், ப்ராபோர்ன், எம்சிஏ ஆகிய 4 முக்கிய மைதானங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 10 அணிகள் விளையாட இருப்பதால் வழக்கத்திற்கு மாறாக இந்த அனைத்து அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

CSK

இதை அடுத்து இந்த தொடரில் பங்கேற்று கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. குறிப்பாக கடந்த வருடம் துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நடப்பு சாம்பியனாக ஜொலிக்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறை கோப்பையை தக்க வைப்பதற்காக மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இதர அணிகளை காட்டிலும் முன்கூட்டியே குஜராத் மாநிலம் சூரத் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

முதல் முறையாக ஆரஞ்சு – ஊதா தொப்பிக்கு ஸ்பான்சர்:
உலக அளவில் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற இந்த ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர்ஷிப் செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் பல கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டும் கம்பெனிகள் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிரபல மொபைல் நிறுவனமான விவோ ஸ்பான்சர்ஷிப் செய்து வந்தது. அந்த வேளையில் ஐபிஎல் 2022 தொடருக்கான புதிய டைட்டில் ஸ்பான்சராக இந்தியாவின் பிரபல டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முன்பிருந்த விவோ நிறுவனத்தை விட 60% கூடுதல் தொகையை வழங்கும் டாட்டா நிர்வாகம் 2022 மற்றும் 2023 வருடங்களுக்கு ஸ்பான்சராக இருக்க பிசிசிஐக்கு 670 கோடி ரூபாய்கள் வழங்கியுள்ளது.

ruturaj

இப்படி ஏற்கனவே உள்ள ஸ்பான்சர்களிடம் இருந்து பல கோடி ரூபாய்களை கறக்கும் பிசிசிஐ தற்போது ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பிக்கும் ஸ்பான்ஸர்களை அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடிக்கும் வீரர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும் அதிக விக்கெட்டுக்களை சாய்க்கும் வீரர்களுக்கு ஊதா தொப்பியும் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுநாள் வரை சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்த தொப்பிகளை ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி என்ற பெயரில் ஒரு கௌரவ விருதாக வழங்கப்பட்டு வந்தது.

பிசிசிஐ பண மோகம்:
ஆனால் தற்போது அதிலும் பணத்தை பார்க்க ஆசைப்பட்டுள்ள பிசிசிஐ ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பிக்கு புதிய ஸ்பான்சர்களை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி “சவூதி ஆரம்கோ” எனும் பிரபல எண்ணெய் நிறுவனம் இந்த ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்ய உள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்து அதிக மதிப்புள்ள 2-வது மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படுகிறது. இதையடுத்து ஐபிஎல் 2022 முதல் இதுநாள் வரை வெறும் ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி என அழைக்கப்பட்டு வந்த பெயர்கள் இனிமேல் “ஆரம்கோ ஆரஞ்சு தொப்பி” மற்றும் “ஆரம்கோ ஊதா தொப்பி” என அழைக்கப்பட உள்ளது.

Orange Cap Purple Cap

ஏற்கனவே ஐபிஎல் தொடரை நடத்தி ஒவ்வொரு வருடமும் சுமார் 4000+ கோடி ரூபாய்களை கல்லா கட்டும் பிசிசிஐ டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வாயிலாக வருடத்துக்கு 300 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டுகிறது. அத்துடன் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி உரிமத்தில் வாயிலாக 5+ வருடங்களுக்கு ஒரு முறை 10,000 கோடிகளுக்கு மேல் பணத்தை வாரி குவித்து உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக மின்னுகிறது. அப்படிப்பட்ட நிலையில் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பிசிசிஐக்கு இன்னும் பணவெறி தீரவில்லையா என்று கேட்க தொடங்கியுள்ளார்கள்.

Advertisement