சி.எஸ்.கே அணியில் இருந்து இவங்க 2 பேரையும் தூக்கவே முடியாது – பிளமிங் திட்டவட்டம்

Fleming
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தி இருந்தாலும் அடுத்தடுத்த மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வி அடைந்து தற்போது புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் உள்ளது. இந்த தொடர் தோல்விகள் காரணமாக பார்க்கப்படுவது யாதெனில் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் ஆகியோரது விலகல் தான் என்று கூறப்படுகிறது.

CSK-1

- Advertisement -

மேலும் இடையில் இரண்டு போட்டிகளில் விளையாடாத ராயுடுவும் அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். இந்நிலையில் ராயுடு மற்றும் பிராவோ ஆகியோர் கடந்த போட்டியில் மீண்டும் அணியில் இணைந்து அணிக்கு பலமாக பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த போட்டியில் சென்னை அணிக்கு தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது போட்டியாக இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை துபாய் மைதானத்தில் சந்திக்கிறது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஷேன் வாட்சனின் இடமும் சர்ச்சைக்குரிய ஓர் இடமாக உள்ளது. ஏனெனில் வாட்சன் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 52 ரன்களும், ஜாதவ் 4 போட்டிகளில் விளையாடி 51 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர்.

Jadhav 1

இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இருப்பினும் அதனை தாண்டி இந்த போட்டியில் அவர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரது இடம் குறித்தும் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

வாட்சன் மற்றும் ஜாதவ் ஆகிய இருவருமே அவர்களது பங்களிப்பை அணிக்கு வழங்கும் வேட்கையில் உள்ளனர். வாட்சன் எந்த நேரத்திலும் வெகுண்டு எழுந்துவிடுவார். கேதர் ஜாதவ் அப்படித்தான் இந்த சீசனில் இது தொடக்கம்தான். அணி மீது தற்போது அழுத்தம் இருக்கிறது என்றாலும் பிரச்சனை இல்லை. வாட்சன் மற்றும் ஜாதவ் ஆகியோர் நிச்சயம் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement