இப்படி செய்வீங்கன்னு எதிர்பாக்கவே இல்ல.. அந்த பையனை பாருங்க.. விராட் கோலியை விளாசிய கவாஸ்கர்

Sunil Gavaskar 3
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணியை தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஏப்ரல் 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி விராட் கோலி 51, ரஜப் படிதார் 50 ரன்கள் எடுத்த உதவியுடன் 207 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஹைதராபாத் அணிக்கு முரட்டுத்தனமாக அடிக்கக்கூடிய டிராவிஸ் ஹெட் 1, ஹென்றிச் க்ளாஸென் 7, ஐடன் மார்க்ரம் 7, அபிஷேக் சர்மா 31 என ரன்களில் அவுட்டானார்கள். அதனால் கடைசியில் சபாஷ் அகமது 40*, கேப்டன் பட் கமின்ஸ் 31 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ஹைதராபாத் 171/8 ரன்கள் மட்டுமே எடுத்து தங்களுடைய சொந்த மண்ணில் முதல் தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

கவாஸ்கர் விமர்சனம்:
அந்தளவுக்கு பந்து வீச்சிலும் சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கரண் சர்மா, கேமரூன் கிரீன், ஸ்வப்பனில் சிங் விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இந்த போட்டியில் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி முதல் 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து மிரட்டினார். ஆனால் டு பிளேஸிஸ் அவுட்டானதும் மெதுவாக விளையாடிய அவர் அடுத்த 25 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அந்த வகையில் 51 (43) ரன்களை 118 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே அவரால் பெங்களூரு எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை நழுவ விட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் விராட் கோலியிடம் இது போன்ற ஆட்டத்தை பெங்களூரு அணி எதிர்பார்க்கவில்லை என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலியிடமிருந்து சிங்கிள்கள் மட்டுமே வருகிறது. அடுத்ததாக தினேஷ் கார்த்திக் மற்றும் மகிபால் வருவதற்காக காத்திருக்கின்றனர். எனவே நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாட முயற்சிக்க வேண்டும். படிடாரை பாருங்கள். அவர் ஏற்கனவே ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடித்துள்ளார். அவரும் நினைத்திருந்தால் சிங்கிள் எடுத்திருக்கலாம். ஆனால் அங்கே வாய்ப்பு இருந்ததால் அவர் அதைத் தவற விடவில்லை”

இதையும் படிங்க: நாம நாலு அடி அடிச்சா.. நமக்கு ஒரு அடி விழத்தான் செய்யும்.. ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்வி குறித்து – கம்மின்ஸ் ஒப்புதல்

“எனவே அடிப்பது எளிதில்லை என்றாலும் விராட் கோலி முயற்சித்திருக்க வேண்டும். நடுவில் அவர் ஃபார்மை இழந்தது போல் தெரிந்தார். குறிப்பாக 31 – 32 ரன்களிலிருந்து அவுட்டாகும் வரை அவர் பவுண்டரிகளை அடிக்கவில்லை. எனவே நாளின் இறுதியில் நீங்கள் முதல் பந்திலேயே அவுட்டாவதையும் 14 – 15 ஓவர்கள் வரை விளையாடி 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாவதையும் உங்களுடைய அணி எதிர்பார்க்க மாட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement